Gold Hunt: தங்கப் புதையலை கண்டுபிடித்த இந்தோனேசிய மீனவர்கள்...
கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள தங்கம், அரிய பொருட்கள் கொண்ட புதையலை இந்தோனேசிய மீனவர்கள் கண்டுபிடித்தனர்!
புதையல் என்றாலே அனைவருக்கும் ஆவல் வரும். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதையல், ஆச்சரியத்தை மட்டுமல்ல, தங்கத் தீவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதா? என்ற கேள்விகளையும் எழுப்புகிறது.
கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள தங்கம், அரிய பொருட்கள் கொண்ட புதையலை இந்தோனேசிய மீனவர்கள் கண்டுபிடித்தனர்!
இந்தப் பொக்கிஷத்தில் விலையே மதிப்பிட முடியாத கற்கள், தங்க மோதிரங்கள், நாணயங்கள் மற்றும் வெண்கல மணிகள் இருந்தன. மில்லியன் கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள நகைகளால் அலங்கரிக்கப்பட்ட 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரின் ஆளுயரச் சிலையும் இந்தப் புதையலில் உள்ளது. இவ்வளவு பெரிய புத்தர் சிலை இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதே இல்லை.
தங்கப் பொக்கிஷங்களுக்குப் புகழ்பெற்ற இந்தோனேசியாவில் மீனவர்கள் விலை மதிப்புமிக்க புதையலை கண்டுபிடித்துள்ளனர். சுமத்ராவில் இந்த புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்கத் தீவு என்று அழைக்கப்படும் இந்தோனேசிய ராஜ்ஜியம் அளப்பறிய செல்வத்தை கொண்ட புதையலைக் கொண்டிருந்ததாகவும், அது, 700 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகவும் கூறப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, மீனவர்கள் இந்தப் புதையலைத் தேடி, இறுதியாக இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள பாலேம்பாங் அருகே உள்ள மூசி ஆற்றில் கண்டுபிடித்ததாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. இரவு நேரத்தில் அந்த இடத்தில் டைவ் செய்யும் போது புதையல் கிடைத்துள்ளது.
READ ALSO | கடவுள் தங்கத்தை உருக்காதே தமிழக அரசே! கையெழுத்து வேட்டை தீவிரம்
புதையலைப் பார்த்த அவர்கள் திகைத்துப் போனார்கள். விலைமதிப்புள்ள ரத்தினக் கற்கள், தங்க மோதிரங்கள், நாணயங்கள் மற்றும் வெண்கல மணிகள் இருந்தன. மில்லியன் கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள நகைகளால் அலங்கரிக்கப்பட்ட 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரின் ஆளுயரச் சிலையும் இந்தப் புதையலில் உள்ளது. இவ்வளவு பெரிய புத்தர் சிலை இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதே இல்லை.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த கலைப்பொருட்கள் அனைத்தும் 7 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை. ஸ்ரீவிஜய நாகரிகத்திற்கு (Srivijaya civilisation) முந்தைய இந்த தீவு, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மர்மமான முறையில் மறைந்து போனது. இந்தப் பேரரசு இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபரணங்கள் மற்றும் கலைப்பொருட்கள் கொண்ட இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் கற்பனையானது அல்ல என்பதை உறுதிப்படுத்துவதாக பிரிட்டிஷ் கடல்சார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சீன் கிங்ஸ்லி, கூறுகிறார். தி கார்டியன் பத்திரிகையிடம் பேசிய அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளில், அசாதாரணமான விஷயங்கள் வெளிவருகின்றன. எல்லா காலங்களிலும் உள்ள நாணயங்கள், தங்கம், புத்த சிலைகள், ரத்தினங்கள் கிடைத்துள்ளன. இது, சிந்துபாத் கதையில் (Sinbad the Sailor) நீங்கள் படித்தது கதையல்ல, நிஜம் என்று உணர வைக்கும் விஷயமாக இருக்கிறது" என்று கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இந்தப் பேரரசு முன்பு ‘நீர் தேசம்’ (Water World) ஆக இருந்தது. மக்கள் மரப் படகுகளை அதிகம் பயன்படுத்தினார்கள். இருப்பினும், இந்த நாகரிகம் முடிவுக்கு வந்ததும், அவர்களின் மர வீடுகள், அரண்மனைகள் மற்றும் கோயில்களும் நீரில் மூழ்கின.
அக்கால மக்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை கண்டெடுக்கப்பட்டுள்ள அன்றைய பழைய பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் நிரூபிப்பதாக டாக்டர் கிங்ஸ்லி கூறினார்.
ALSO READ | பாம்பு சட்டை உரித்ததை பார்த்திருக்கிறீர்களா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR