ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நோவம் ஹப்ரீட் என்பவர், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். குழந்தைகள் மீது பாசம் கொண்ட நோவாம் ஹப்ரீட்டும் 2012 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். அங்கு ஃபார்மாசூட்டிக்கல் நிறுவனத்தில் கெமிஸ்ட் அனலிஸ்ட்டாக பணியில் சேர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | சைக்கிள் ஓட்டி இணையத்தை கலக்கும் பச்சைக்கிளி: வைரலான வீடியோ


ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக மனைவி கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 3.34 மில்லியன் அமெரிக்க டாலரை சன்மானமாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் 18 வயது நிரம்பும் வரை மாதம் 5 ஆயிரம் இஸ்ரேலிய ஷேக்கல்கள் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


இந்த தண்டனையில் கடைசியாக கொடுக்கப்பட்ட நிபந்தனை தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹப்ரீட், சன்மானம் கொடுக்காமல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், டிசம்பர் 31,9999 ஆம் ஆண்டு தான் வெளியேற முடியும் என இஸ்ரேல் மத நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுமுறை மற்றும் வேலை விஷயமாகக்கூட ஹப்ரீட் இஸ்ரேலை விட்டு வெளியேற முடியாது. இதனால், 2013 ஆம ஆண்டு முதல் இஸ்ரேலில் வசித்து வரும் ஹப்ரீட், இஸ்ரேலிய மதச் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்நாட்டின் சட்டங்கள் எதுவும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு தன்னைப்போல் ஏரளாமானோர் அங்கு மாட்டிக் கொண்டிருப்பதாகவும், இந்த விஷயம் குறித்து வெளிநாட்டினர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ஹப்ரீட் கூறியுள்ளார்.    


ALSO READ | ALSO READ |  காத்திருந்த புறா, கிஸ் கொடுத்த பூனை: பூரிக்கும் நெட்டிசன்கள், வைரலான வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR