கேரளா வெள்ளம் குறித்து தனது முகப்புத்தகத்தில் இழிவான கருத்து தெரிவித்த நபரின் வேலையினை அவரது தலைமை பறித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துபாயினை மையமாக கொண்டு இயக்கும் Lulu Group International நிறுவனத்தின் ஓமன் கிளையில் காசாளராக பணிபுரிபவர் Rahul Cheru Palayattu. தற்போது கேரளா முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவு கரம் நீட்டப்பட்டு வருகின்றது. இதனை குறித்த செய்தி ஒன்றினை பிரபல துபாய் பத்திரிக்கை பகிர்ந்துள்ளது. இந்த பதிவிற்கு இழிவான வகையில் Rahul Cheru Palayattu பதில் அளித்துள்ளார்.


இதன் காரணமாக இவர் பணிபுரியும் Lulu Group International நிறுவனம் இவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.


இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...



"கேரள இடற்பாடு குறித்து தவறான, இழிவான கருத்தை பதிவு செய்தமையால் தங்களது பணி உடனடியாக பறிக்கப்படுகிறது. எனவே அலுவலகத்தின் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட உடமைகள் மற்றம் உரிமைகளை உடனடியாக திருப்பியளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளது.


இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட Rahul Cheru Palayattu தன் நிறுவனத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார், எனினும் இவரது செயல்பாட்டினை ஏற்க அவரது நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை.


சம்பந்தப்பட்ட Lulu group நிறுவனத்தின் தலைவர் MA Yusuff Ali கேரளாவை சேர்ந்தவர். தற்போது துபாயில் பெரும் தொழிலதிபராக வளர்ந்து நிற்கின்றார். தற்போது கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தன் நிறுவனத்தின் மூலம் 9.23 மில்லியன் UAE திராம்ஸ்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.