நம்து தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமானவை கலைகள். கலாச்சாரங்கள் பல்வேறுவிதமாக இருந்தாலும், பொதுவாக பெண்கள் மட்டுமே கடைபிடித்து செழிக்கச் செய்த பாரம்பரிய பழக்கங்கள், வழக்கங்களாக, கலைகளாக இன்றும் தொடர்கின்றன. அதில் முதன்மையாக மிளிர்வது கோலம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எளியவர் முதல் கலைஞர்கள் வரை வரையும் வரைகலை கோலம். கோலம் என்பது மாவுக்கோலமாகவும், பொடிக் கோலமாகவும் தமிழ் கலாசாராத்தின் சாரமாய் தொடரும் கோலக் கலை தற்போது நவீன வடிவங்களையும் எடுத்துவிட்டது.



மாக்கோலம், வண்ணக்கோலம்,  பூக்கோலம், 3-டி கோலம், அச்சுக்கோலம், பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட கோலம், கம்ப்யூட்டர் கோலம், மணிக் கோலம் ரங்கோலி என கோலாகலமாய் கொடிக்கட்டிப் பறக்கும் கோலம் பழங்காலத்தில் இருந்து இக்காலம் வரை மாண்பு மங்காமல் நாள்தோறும் மலர்ந்துக் கொண்டே இருக்கிறது.


ALSO READ | கோலங்கள்... பொங்கல் பாரம்பரிய கோலங்கள்...


மொட்டு, பூ, காய், கனி, பக்தி, வாழ்த்து என பலவிதமாய் மலரும் கோலங்கள் (Traditional Art) செய்திகளை கலைகளாய் எடுத்து வைக்கிறது. அதற்கு உதாரணமாக திருக்குறளை கோலமாய் வரைந்த சாதனையைச் சொல்லலாம்.


நான்கு வருடங்களாக, தினம் ஒரு திருக்குறளை கோலமாக எழுதி சாதனை படைத்து புதுமை படைத்த சரித்திரத்தை செய்தது ஒரு மதுரைப் பெண். கோலமானது, காலத்திற்கு ஏற்றாற்போல் புதுப்புது பரிமாணங்களையும் எடுத்து வெவ்வேறு வடிவங்களில் தன்னைத்தானே வளமையாக்கிக் கொண்டு வருகிறது. 


கோலங்களை, கம்பிக் கோலம், புள்ளிக் கோலம் என இரு வகைகளாக பிரிக்கலாம். கோடுகளை எளிமையான வடிவவியல் ஒழுங்குகளில் வரைந்து சீரான வடிவங்களை உருவாக்குவது கம்பிக்கோலம்.


ALSO READ | பழையன கழிதலும், புதியன புகுதலும்! மகர சங்கராந்தி திருநாள்


புள்ளிகளை வைத்து, அவற்றை இணைத்து கொண்டு சேரும் கோடுகளால் உருவாவது புள்ளிக்கோலம் (Traditional Art Kolam) ஆகும். அதிலும் நேர்ப்புள்ளிகள், ஊடுபுள்ளிகள் என இருவகை உண்டு. 



தினசரி போடும் வகை வகையான கோலங்களைத் தவிர, பண்டிகை, விழாக்கள் என ஒவ்வொரு முக்கிய தினத்திற்கும் விதவிதமான கோலங்கள் உண்டு. 


பிறந்த குழந்தையை முதன்முதல்லாக வீட்டுக்கு அழைத்து வரும்போது தொட்டில் கோலம், சுபிட்சத்திற்காக இருதய கோலம், கல்யாணம் செய்து வரும் வீட்டுக்கு முதன்முறையாய் வரும் புதுமணத் தம்பதிகளை வரவேற்க மனைக்கோலம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.  


வட்டக்கோலம், கம்பிக்கோலம், புள்ளிக்கோலம், தந்திரிக் கோலம், ரங்கோலி கோலம் என விதம் விதமாக கோலங்கள் இருந்தாலும், இறப்பு நடந்த வீடு, திதி, அமாவாசை தினங்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.


ALSO READ | 100 இளைஞர்களை கொடுங்கள், இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்


கோலம் என்பது அழகுக்காக மட்டுமா? அழகுக்காக மட்டுமல்ல, கலையின் ஒரு வடிவமாகவும், தெய்வீக சக்தியை வீட்டுக்குள்  வரவைக்கும் ஒரு கலையாகவும் பார்க்கப்படுகிறது. வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் வரையப்பட்டு, நேர்மறை ஆற்றலைக் கொடுக்கும் கோலம் (Traditional Art Kolam), மார்கழி மாதத்தில் அதிகாலையில் தமிழகத்தில் ஆங்காங்கே தெருக்களில் பூத்திருக்கும்.


மார்கழி  மாதத்தில் அதிகாலையில் சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலம் போடும் வழக்கம் இன்றும் உண்டு. கோலப்போட்டிகள் என்பது ஒருபுறம் என்றால், நான் போடும் கோலமே பெரிதாகவும், முதன்மையானதாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் போட்டிப்போட்டுக் கொண்டு கோலமிட்டு அசத்துவார்கள்.


உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயுவை நம் உடல் முழுக்க பரவ செய்யும் மார்கழி மாதக் காலையில் கோலமிட்டு கலையை வளர்க்கிறோம் என்று தெரியாமலேயே ஆரோக்கியத்தையும் பெற்று அனைவரின் மனதையும் மகிழ்வித்து  மகிழும் பெண்களால் சிறப்புறுகிறது மார்கழி மாதம்.


ALSO READ | மேற்கு வங்க மண்ணில் உதித்த ஞான சூரியன் விவேகானந்தர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR