மார்கழி மாதம் அதிகாலையிலே எழுந்து பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் சிறப்பான விஷயங்களில் ஒன்று அழகான கோலங்கள்...
தமிழகத்தின் அனைவரின் வீட்டு வாசலிலும் கோலம் தைத்திருநாளன்று பார்க்கலாம். அவற்றில் சிலக் கோலங்கள்..இவை கோலமாவு கோகிலாவின் கோலங்கள் அல்ல, பொங்கலன்று தமிழச்சிகள் போடும் பாரம்பரிய கோலம்
Also Read | பொங்கலோ பொங்கல்! மகிழ்ச்சி பொங்கி பூவாய் மலர வாழ்த்துக்கள்
புகைப்படங்கள்உபாயம்: ஏ.என்.ஐ செய்தி நிறுவனம்
கலைநயம் கொண்ட மனது சொல்லும் கட்டளையை கேட்டு கரங்கள் அடிபணிந்தால், தரையில் தடையில்லாமல் உருவாகிறது உருமாறும் கோலங்கள்
கோலங்கள் அழகாய் இருக்கின்றன. அவற்றை அலங்கரிக்கும் கரங்கள், வெற்று இடத்தை கலைக்கூடமாய் மாற்றுகின்றன
அடிப்படைக் கோலம் அரிசிமாவில் போடப்படுவது. இந்த அடிப்படைக்கு வண்ணங்கள் சேர்த்து வண்ணக் கோலமாய் மாற்றும் கைகள்...அவை தங்கக் கைகள்
வண்ண வண்ணக் கோலங்கள் மனதில் வண்ணத்துப்பூச்சியை பறக்கச் செய்கின்றன
சிறு குழந்தைகளும் கோலம் போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்