புதுடெல்லி: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,23,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 1,341 பேர் மரணமடைந்துள்ளது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.
  
இந்த நிலையில், ஹரித்வாரில் நடந்து வரும் கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் -19 நெருக்கடி ஏற்படுத்தும் பாதிப்பு அபாயத்தை கருத்தில் கொண்டு, அனைவரும் இருந்த இடத்தில் இருந்தே கடவுளை வணங்க வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Also Read | தீயாய் பரவும் கொரோனா; 10 நாட்களுக்கு லாக்டவுன் அமல்படுத்த கோரிக்கை


ஜூனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கிரியுடன் (Swami Avdheshanand Giri) அவர்களுடன் தொலைபேசியில் பேசியதாகவும், பாதிக்கப்பட்ட துறவிகளில் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். துறவிகளில் பலருக்கு கொரோனா தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உள்ளூர் நிர்வாகத்துடன் அவர்கள் ஒத்துழைத்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.



"இரண்டு 'ஷாஹி ஸ்னான்' (shahi snan) நடந்திருப்பதாகவும், நேரடியாக கும்ப மேளாவில் பங்கேற்பதை தவிர்த்து, மனதிலேயே வழிபாடு நடத்த வேண்டும். கும்பமேளாவில் மேலும் பங்கேற்பது கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும். அனைவரும் வேண்டுகோளுக்கு இணங்கி கொடும் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும்" என்று பிரதமர் இந்தி மொழியில் ட்வீட் செய்துள்ளார்.


Also Read | Kumbh Mela 2021: நிஜாமுதின் தப்லிகி மஜாத் மத கூட்டத்தை நினைவுபடுத்தும் ஹரித்வார் கும்பமேளா


பிரதமர் மோடியின் (Prime Minister Narendra Modi) வேண்டுகோளுக்கு பதிலளித்த அவ்தேஷானந்த், கோவிட் -19 நிலைமை காரணமாக அதிக எண்ணிக்கையில் புனித நீராடும் நிகழ்ச்சிக்காக கும்ப மேளாவில் கலந்து கொள்வதற்கு ஹரித்வாருக்கு வர வேண்டாம் என்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மக்களை கேட்டுக்கொண்டார்.



பிறரின் உயிரை மட்டுமல்ல, தனது உயிரையும் காப்பாற்றுவது புனிதமான செயல் என்று அவர் கூறினார். கடந்த சில வாரங்களாக கோவிட் -19 (COVID-19) பாதிப்பு எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்து வரும் நிலையில் கும்பமேளாவில் லட்சக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவில் இருப்பதாக அஞ்சப்படுகிறது.  


ALSO READ | தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு!


தொற்றுநோயை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு கும்பமேளாவில் புனித சடங்குகள் (auspicious event), நீராடலுக்கான நாட்களின் எண்ணிக்கை ஏப்ரல் 1 முதல் 30 வரை ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளா, ஜனவரி நடுப்பகுதியில் இருந்து (மகர சங்கராந்தி) ஏப்ரல் வரை நடைபெறுகிறது.


இந்தியாவில் நேற்று மட்டும் 14,95,397 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம் இதுவரை செய்யப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 26,49.72,022 ஆக அதிகரித்து உள்ளது.


ALSO READ | கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR