தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தது.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 13, 2021, 08:39 AM IST
தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் பரவலும் மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,62,879 பேருக்கு புதிதாக தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் 13,686,073 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் (Coronavirus) முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்த தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு (Central Government) தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தது. அதில்.,

இந்த ஆய்விற்கு பின்பு, நோய்த்தொற்றின் விகிதத்தை குறைப்பதற்காக, கீழ்க்காணும் உத்தரவு மற்றும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு முதலமைச்சர் வழங்கினார். பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு நோய்த்தொற்றின் விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழ் கொண்டுவர வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் அதிகப்படுத்த வேண்டும். மேலும் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும்.

ALSO READ | கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்

தமிழ்நாடு முழுவதும் தேவையான அளவில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து சளி, மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939-ன்படி இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதாரம், உள்ளாட்சி, காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும். கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் என மொத்தம் 37 லட்சத்து 80 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  அந்தந்த தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில், சம்பந்தப்பட்ட அமைப்புகள், பெருநகர சென்னை மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோவிட் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். மேலும் திரையரங்குகள், காய்கனி சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News