Kumbh Mela 2021: நிஜாமுதின் தப்லிகி மஜாத் மத கூட்டத்தை நினைவுபடுத்தும் ஹரித்வார் கும்பமேளா

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 14, 2021, 11:12 PM IST
  • நிஜாமுதின் தப்லிகி மஜாத் மத கூட்டத்தை நினைவுபடுத்தும் ஹரித்வார் கும்பமேளா
  • இரண்டே நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா
  • அடுத்த 9 நாட்களில் இன்னும் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள்
Kumbh Mela 2021: நிஜாமுதின் தப்லிகி மஜாத் மத கூட்டத்தை நினைவுபடுத்தும் ஹரித்வார் கும்பமேளா title=

ஹரித்வார்: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பல்வேறு மாநிலங்களிலும் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா வெகு விமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் கங்கை ஆற்றில் கூடும் பக்தர்கள் புனித நீராடுவது கும்பமேளாவின் முதன்மையான சடங்காகும்.

கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நிலையிலும், ஹரித்வாருக்கு நாள்தோறும் 10 லட்சம் பேர் வருகின்றனர். இது கொரோனா பரவலை அதிகப்படுத்துவதாக இருக்கிறது.

ALSO READ | தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு!

கும்பமேளா விழாவின் மூன்றாவது தினமான இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நதியில் குளித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளோ, சமுக இடைவெளியோ அங்கு பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கும்பமேளா முடிய இன்னும் 9 நாட்கள் எஞ்சியிருப்பதால், தினசரி லட்சக்கணக்கான மக்கள், ஹரித்துவாருக்கு வருவார்கள் என்பதால்  கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத் (Tablighi Jamaat) என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டின் மூலமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Also Read | விதிகள் மாறாவிட்டால் 3 லட்சம் Remdesivir தடுப்பூசிகள் அழிக்கப்படும்

அந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் இருந்தது. அப்போது தப்லிகி ஜமாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய மதக் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தும் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் மூலமாகவே நாட்டில் கொரோனா பரவியதாக சர்ச்சைகள் எழுந்தது நினைவிருக்கலாம்.

தற்போது நாட்டில் கொரோனாவின் அலை மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில் மகா கும்பமேளாவில் கட்டுப்பாடில்லாமல் கூடும் கூட்டம் கவலையளிக்கிறது. அதிலும், கும்பமேளாவிற்கு பிறகு அனைவரும் தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் சென்ற பிறகு கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் மிகவும் அதிகமாகலாம் என்ற அச்சங்களும் அதிகரிக்கின்றன.

ALSO READ | கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News