சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். அதேபோல் இந்த தளத்தில் நிறைய வேடிக்கையான வீடியோக்கள் உள்ளன. அப்படிப் பட்ட ஒரு அதிர்ச்சியான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெகுவாக வைரலாகியும் வருகின்றது. அதன்படி இங்கு ஒரு பெண் திருடும் நோக்கத்துடன் நகைக்கடைக்கு செல்கிறார். ஆனால் அங்கு நடப்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். அப்படிப் பட்ட வீடியோவை தான் இன்று நாம் காண உள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில் அந்தப் பெண் ஒரு வாடிக்கையாளரைப் போல நகைக் கடையை சென்றுள்ளார். இங்கு நகைக்கடைக்காரரும் அவரை வாடிக்கையாளராக நினைத்து தங்க நகைகளைக் காட்டத் தொடங்கினார். இதன் போது அந்த பெண்ணுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி தனது பையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேயை அந்த பெண் எடுத்து தன் கைகளில் வைத்துக்கொள்வதை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்.


மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 


பிறகு அந்த பெண் தன் கையில் வைத்து இருந்த பேப்பர் ஸ்பிரேவை நகைக்கடைக்காரரின் கண்களில் அடித்தவிட்டு அங்கிருந்த நகைகளை எடுத்து ஓட முயற்ச்சிக்கிறார். அப்போது அடுத்த நொடியிலேயே நகைக்கடைக்கார் அந்த பெண்ணை எப்படி ஓடாமல் பிடித்து வைத்துக்கொள்கிறார் என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.


வீடியோ இங்கே காண்க:



இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. தற்போது இந்த வீடியோ @meemlogy என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் தற்போது வரை இந்த வீடியோவுக்கு 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ