புதுடெல்லி: கேடி ஜாதவ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா ஓபன் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் லக்ஷ்யா சென் வென்றார். முன்னதாக, இந்தியா ஓபன் 2022ல் ஷட்லர் பிவி சிந்து சனிக்கிழமையன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியிலிருந்து  தோல்வி அடைந்துவெளியேறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16, 2022) இந்தியா ஓபன் 2022 பட்டத்தை வென்ற ஷட்லர் லக்ஷ்யா சென், போட்டியின்போது கொஞ்சம் பதட்டமாகவும் ஆர்வமாகவும் இருந்ததாகவும், முக்கியமான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.


20 வயதான சென், தனது வாழ்க்கையில் சூப்பர் 500 பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை என்பது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகவே இருக்கும்.


கேடி ஜாதவ் ஸ்டேடியத்தில் (KD Jadhav Stadium) நடந்து வரும் இந்தியா ஓபன் 2022 ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் லக்ஷ்யா சென் பட்டம் வென்றார்.


ALSO READ | இந்திய ஓபன் பாட்மிண்டன் அரையிறுதியில் பிவி சிந்து தோல்வி!


54 நிமிடங்கள் நீடித்த இந்த இறுதிச்சுற்றில் 20 வயதான சென், சிங்கப்பூரின் லோ கீன் யூவை 24-22, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.


"இது நான் வெற்றி பெற முடிந்த மிகப்பெரிய  உலக டூர் போட்டியாகும். வெற்றி நன்றாக இருக்கிறது மற்றும் போட்டி, இது ஒரு பெரிய போட்டி என்பதால், விளையாட்டை முடிக்கும் சமயத்தில் சற்று பதட்டமாகவும் ஆர்வமாகவும் இருந்தேன். அதுவும் இறுதிப் போட்டியில் விளையாடி வெற்றியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று ஒரு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின் போது சென் கூறினார்.


"முதல் ஆட்டத்தில் நான் இரண்டு எளிதான புள்ளிகளைக் கொடுத்தேன். ஆனால் நான் நிதானமாக விளையாடினேன் என்று என்னால் சொல்ல முடியும். கடந்த ஆறு மாதங்களில், சிங்கப்பூரின் லோ கீன் யூவுடன் நான்கு முறை விளையாடியுள்ளேன். ஆனால் இன்று நான் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு முக்கியமான போட்டி," என்று லக்‌ஷ்யா சென் கூறினார்.



லோ கீன் யூ பற்றி கேட்டபோது, ​​லக்ஷ்யா இவ்வாறு கூறினார்: "அவர் வேடிக்கையான சுபாவம் கொண்டவர் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் விளையாட்டைத் தாண்டி வெளியே நல்ல நண்பர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும்போது, ​​அது போட்டியாக இருக்கிறது. அரையிறுதிக்குப் பிறகு நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம்."


முதல் ஆட்டத்தில் (India Open 2022 Badminton) லக்ஷ்யா சென் முன்னிலை வகித்தார், ஆனால் உலக சாம்பியனான கீன் யூ  22-22 என சமநிலைக்கு ஆட்டத்தைக் கொண்டுவந்தார்.  


பிறகுக், இந்திய ஷட்லர் தனது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி, முதல் கேமை 24-22 என வென்றார். இறுதியில் பட்டத்தை வென்றார்.


"நான் முக்கியமான போட்டிகளில் விளையாடி வென்றிருப்பது, எத்கிர்வரும் போட்டிகளில் விளையாட மிகுந்த நம்பிக்கையைத் தரும். இந்தப் போட்டியில் ரிதம் இருந்ததாக உணர்கிறேன்" என்று இந்தயா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் சாம்பியன் லக்‌ஷ்யா சென் கருதுகிறார்.


ALSO READ | Novak Djokovic கனவு தகர்ந்தது; நாடு திருப்பி அனுப்ப உத்தரவு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR