Australian Open 2022: Novak Djokovic கனவு தகர்ந்தது; நாடு திருப்பி அனுப்ப உத்தரவு!

ஆஸ்திரேலியாவில், நாளை, அதாவது ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியன் ஒப்பன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடக்கவுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 16, 2022, 02:05 PM IST
Australian Open 2022: Novak Djokovic கனவு தகர்ந்தது; நாடு திருப்பி அனுப்ப உத்தரவு! title=

ஆஸ்திரேலியாவில், நாளை, அதாவது ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியன் ஒப்பன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இரு தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம். அத்துடன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலியா வந்துள்ள வீரர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தாத காரணத்தினால் இந்த போட்டியில் பங்கேற்க வந்த உலகின் நம்பர் 1 டென்னஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சினுக்கு (Novak Djokovic) அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் அவர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை எனவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவரின் விசாவையும் ஆஸ்திரேலியா அரசு அதிரடியாக ரத்து செய்தது. 

டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) இரண்டாவது முறையாக தனது விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்கு எதிரான மேல்முறையீடை நீதிமன்றம்  அடுத்து நாடு திருப்பி அனுப்பட உள்ளார்.

20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நோவக் ஜோகோவிச் (Novak Djokovic), திங்கள்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபனில் சக செர்பிய வீரரான மியோமிர் கெக்மனோவிச்சுடன் விளையாட திட்டமிட்டிருந்த நிலையில், அவரது சாம்பியன் கனவு தகர்ந்தது. 

ALSO READ | போன மாசம் கொரோனா! இந்த மாசம் விசா தடை! நோவக் ஜோகோவிச்

எவ்வாறாயினும், டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நட்சத்திரத்தை நாடு திருப்பி அனுப்பு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்ததால், போட்டியில் எப்படியும் பங்கேற்று விடலாம் என்ற நம்பிக்கை தகர்ந்தது.

முன்னதாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் கனவுடன் போட்டியிடுவதற்காக மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவரது விசா முதலில், ஜனவரி 6ம் தேதி ரத்து செய்யப்பட்டது. தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி இல்லை என்ற விதிகளில் இருந்து மருத்துவ விலக்கு அளிக்க முயாஅது என விசாவை ரத்து செய்ததாக அதிகாரிகள் அறித்தனர்.  நாடு திருப்பி அனுப்பியதன் காரணமாக 3 ஆண்டுகளுக்கு அவர் ஆஸ்திரேலியா வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ALSO READ | T20-க்கு 2 புது ரூல்ஸ் கொண்டு வந்த ஐசிசி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News