ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளிய நபர்!! திக் திக் சிசிடிவி காட்சிகள்..
Delhi Man Shot Dead Viral CCTV Footage : ஒருவர், காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளும் காட்சி பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க செய்துள்ளது.
Delhi Man Shot Dead Viral CCTV Footage : டெல்லியில், 40 வயது நபர் ஒருவர், டீன்-ஏஜ் நபர் ஒருவரும் சுட்டுத்தள்ளப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் என்ன நடந்தது? இவர்கள் இருவரையும் சுட்டுத்தள்ளிய அந்த நபர் யார்? இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
தீபாவளி கொண்டாட்டம்:
அக்டோபர் 31ஆம் தேதியான நேற்று, இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்படி ஒரு கொண்டாட்டத்தின் போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஷர்மா என்ற நபர், தனது பிள்ளைகள் மற்றும் சகோதரியின் மகனுடன் தனது வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியிருக்கிறார்.
அப்போது திடீரென்று அங்கு பைக்கில் வந்த இருவரில், ஒருவர் ஆகாஷின் கால்களை தொட்டு வணங்கி இருக்கிறார். பின்பு, அவர்கள் எதிர்பாராத சமயத்தில் ஆகாஷ் மற்றும் அவரது மகன் க்ரிஷ் ஷர்மாவை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதையடுத்து, செய்வதறியாது நின்ற ஆகாஷின் சகோதரி மகன், சுட்டவர்களின் பின்னால் ஓடியிருக்கிறார். அப்போது அவரும் சுடப்பட்டிருக்கிறார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட, ஆகாஷும், அவரது 16 வயது மருமகனும் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே உயிரிழந்து விட்டனர். ஆகாஷின் மகன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
வைரல் வீடியோ..
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இடம் பெற்றிருந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதில், பைக்கில் வரும் நபர்களில் ஒருவர் ஆகாஷின் கால்களை தொட்டு கும்பிடுகிறார். மாஸ்க் அணிந்திருக்கும் இன்னொருவர், பேண்டிற்குள் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வீட்டிற்குள் சென்ற ஆகாஷை சுட்டுவிட்டு தப்பிச்செல்கிறார்.
போலீஸார் விசாரணை..
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே போலீஸார் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அங்கு இருந்த ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டி, சம்பவத்தை நேரில் கண்டவர்களின் கூற்றுகளும் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது, பகை காரணமாக நிகழ்த்தப்பட்டிருக்கும் கொலை என்றும், ஆகாஷின் மனைவி குற்றவாளிகளை தெரிந்தவர்கள்தான் என்று கூறியதாகவும் போலீஸார் கூறியிருக்கின்றனர். இவர்களுக்குள்ளான பகை, நில பிரச்சனை காரணமாக எழுந்ததாகவும் கூறப்படுகிறது. ஆக்ஷானின் சகோதரர் யோகேஷ் பேசுகையில், முன்னதாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்காக பொய்யாகக் கைது செய்யப்பட்டதாக கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | நடுரோட்டில் தந்தை - மகள் செய்த சாகசம்! அடுத்து என்ன ஆனது என்று பாருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ