வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது


காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பெரும்பாலும் மக்களை கவர்கின்றன. அதுவும் காட்டு ராஜா சிங்கத்தின் வீடியோ என்றால் கேட்கவே வேண்டாம். சிங்கம் மற்றும் காளைகளின் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. 


இந்த வீடியோவில் காளைகளின் கூட்டம் வேகமாக ஒரு காட்டில் சென்றுகொண்டிருபதைக் காண முடிகின்றது. அப்போது, அங்கு பதுங்கியிருக்கும் ஒரு சிங்கம் யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு காளையை தாக்குகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான உடனேயே படு விரைவாக வைரலாகி வருகிறது.


காளை மீது சிங்கத்தின் தாக்குதல்


வனவிலங்குகளின் இந்த வீடியோவில், பல சஃபாரி சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அப்பகுயை சுற்றிப்பார்க்க வந்திருப்பதைக் காண முடிகின்றது. அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சிறிய தூரத்தில் இரண்டு சிங்கங்கள் அமர்ந்துள்ளன. அப்போது காளைகளின் கூட்டம் ஒன்று அதிவேகமாக ஓடி வருகிறது. இதற்கிடையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு சிங்கம் காளைகளின் அருகில் சென்று மின்னல் வேகத்தில், ஒரு காளையைப் பிடித்து தாக்குகிறது. காட்டுக்குள் சஃபாரி சென்றவர்கள் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். 


மேலும் படிக்க | அணைக்கட்டு மீது தனியாக நடக்கும் குழந்தை - பதைபதைக்க வைக்கும் வீடியோ


திக் திக் நிமிடங்கள் கொண்ட அந்த அதிர்ச்சி வீடியோவை இங்கே காணலாம்: 



சிங்கிளா மாஸ் காட்டிய சிங்கத்தின் வீடியோ வைரல் ஆனது 


இந்த வீடியோ, interestinganimal0 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோ எவ்வளவு பிரபலமாகியுள்ளது என்பதை அதற்கு கிடைத்துள்ள வியூஸ்களிலிர்ந்து அறிய முடிகிறது. சிங்கத்தின் இந்த வீடியோ 16 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 


இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். ஒருவர், 'பிக் பாய்க்கு பசிக்கிறது' என வேடிக்கையாக எழுதியுள்ளார். 


மற்றொரு 'பாஸ் பாஸ்தான்' என கமெண்ட் செய்துள்ளார். சிங்கத்தை நேரில் பார்த்தால் மட்டுமல்ல, வீடியோவில் பார்த்தாலும் சிலிர்க்கத்தான் செய்கிறது!! 


மேலும் படிக்க | வைரல் வீடியோ: முதலையை புரட்டி எடுக்கும் சிறுத்தை.. திக் திக் நிமிடங்கள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR