வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இணையத்தில், பாம்பு, சிங்கம், குரங்கு, யானை ஆகிய விலங்குகளுக்கு அதிக மவுசு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆபத்தான மிருகத்தைக் கூட அன்பினால் கட்டுக்குள் கொண்டுவர முடியும். சமூக வலைதளங்களில் இதற்கு சான்றாக பல காட்சிகளை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். எனினும், சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகளை கட்டுப்படுத்துவது மிக கடினம். கண் இமைக்கும் நேரத்தில் எதிராளியை இரையாக்கும் அளவு கொடூரமானவை இவை. ஆனால் இந்த விலங்குகளையும் கட்டுப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருபவர்களும் உள்ளனர். தற்போது வெளிவந்துள்ள வீடியோவில் இது போன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது. 


மேலும் படிக்க | கிஸ் கொடுத்த சிம்பன்சி....அதோட நிறுத்தல: ஷாக் ஆன பெண், வைரல் வீடியோ 


மனிதன் மீது பாய்ந்த சிங்கம்


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் ஒரு நபர் செல்வதைக் காண முடிகின்றது. அந்த அடைப்பின் கதவை அவர் திறந்தவுடன், ஒரு சிங்கம் ஓடி வந்து அவர் மீது பாய்கிறது. அடுத்த கணமே, அவரை தரையில் சாய்த்து, அவரை அரவணைக்கத் தொடங்குகிறது. 


பாசத்தை பொழியும் பெண் சிங்கத்தின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோவில் நாம் காண்பது போன்ற ஒரு காட்சியை பொதுவாக நாம் காண முடியாது. இந்த வீடியோ sirgathelioness என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 'சில அணைப்புகள் மற்றவற்றை விட மிகுந்த ஆறுதலாக இருக்கும்' என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.


இந்த வீடியோவை முதலில் பார்க்கும்போது, பெண் சிங்கம் நபரை தாக்க வருவது போல் தோன்றினாலும், பின்னர்தான், அது பாசத்தோடு கட்டித் தழுவிக்கொள்வதை புரிந்துகொள்ள முடிகின்றது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பந்தம் மிக வினோதமானது. அதற்கு இந்த வீடியோவும் மற்றொரு சாட்சியாகும்!! 


மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ