அடிச்சாலும் புடிச்சாலும் நீதான் எனக்கு..! சண்டைக்கு பின் சமாதானமான பூனை-நாய்!

நாயும் பூனையும் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுகொண்டு பின்பு சமாதானமாகி ஒன்றுக்கொன்று பாசமாக இருக்கும் க்யூட்டான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 17, 2022, 10:28 AM IST
  • எதிர் எதிரே நின்று சண்டையிட்டு கொள்ளும் நாய், பூனை.
  • பின்பு சமாதானம் ஆகி கொஞ்சி கொள்கிறது.
  • இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அடிச்சாலும் புடிச்சாலும் நீதான் எனக்கு..! சண்டைக்கு பின் சமாதானமான பூனை-நாய்! title=

இணையத்தில் தினம்தினம் நம் துயரங்களை நீக்கி மகிழ்விக்கும் வகையில் பல அற்புதமான காட்சிகளை கண்டுகளித்து வருகிறோம்.  நாம் காணும் பெரும்பாலான வீடியோக்களில் நமது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களும, பூனைகளும் செய்கின்ற செயல்கள் தான் இடம்பெற்றுள்ளன.  ஒன்று நாயும் பூனையும் சண்டைபோட்டு பார்த்திருப்போம், இல்லையென்றால் நாயும் பூனையும் ஒன்றுக்கொன்று பாசமாக இருக்கும் காட்சியை பார்த்திருப்போம். ஆனால் இங்கு வைரலாகும் வீடியோவில் இரண்டும் கலந்த கலவையான ஒரு சம்பவத்தை பார்க்க போகிறோம்.  பொதுவாக காதலில் சண்டைக்கு பின் சமாதானம் ஆகச்சிறந்த போதை என்று கருதப்படுகிறது, அப்படி தான் இங்கும் நாயும் பூனையும் சண்டையிட்டுக்கொண்டு பின்பு சமாதானமாகி கொஞ்சும் காட்சி பலரது இதயங்களையும் களவாடியுள்ளது.

மேலும் படிக்க | சீறி சினந்து முட்டி மோதும் காளைகள்! கொம்பு சீவி விட்டது யாரோ?

இந்த க்யூட்டான வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் நாயும், பூனையும் அருகருகே இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த இரண்டு விலங்குகளும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு பயங்கரமாக சண்டையிட்டு கொண்டிருக்கிறது.  நாயும், பூனையும் சுற்றி சுற்றி பறந்து பறந்து சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றது, அதன்பின்னர் நாய் அமைதியாக தரையில் படுத்து கொள்கிறது.  பூனை நாயின் அருகில் மெதுவாக செல்கிறது, பூனை நாயை தொட முயல்கையில் அந்த நாய் பின்னால் நகர்கிறது, இப்படியே பூனை நெருங்க நெருங்க நாய் விலகி செல்கிறது.  உடனே அந்த பூனை நாயின் முகத்தில் தனது நாக்கால் வருடி தனது பாசத்தை காண்பிக்கிறது.

 

நாயும் பூனையும் சண்டைக்கு பின் சமாதானமாகிய காட்சி இணையவாசிகள் பலரையும் ஈர்த்திருக்கிறது.  இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு எம்பத்திஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | தாத்தா ஆடும் ஆட்டம், பாத்தா ஆடிப்போயிடுவீங்க: கிரிக்கெட் தாத்தாவின் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News