கிஸ் கொடுத்த சிம்பன்சி....அதோட நிறுத்தல: ஷாக் ஆன பெண், வைரல் வீடியோ

Funny Animal Video:ஓரு பெண்ணுக்கு சிம்பன்சி கொடுத்த முத்தத்தின் வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இதை பார்த்த இணையவாசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 16, 2022, 03:41 PM IST
  • புகைப்படம் எடுக்க சிம்பன்சியிடம் சென்ற பெண்.
  • சட்டென்று பிடித்து கிஸ் கொடுத்த சிம்பன்சி.
  • வைரலான வீடியோ.
கிஸ் கொடுத்த சிம்பன்சி....அதோட நிறுத்தல: ஷாக் ஆன பெண், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இணையத்தில், பாம்பு, சிங்கம், குரங்கு, யானை ஆகிய விலங்குகளுக்கு அதிக மவுசு உள்ளது. 

விலங்குகளில் மிகவும் குறும்புத்தனமானவை குரங்குகள், லங்கூர்கள் மற்றும் சிம்பன்சிகள். இவற்றின் குறும்புத்தனம் காண்பவர்களை வியக்கும் வகையில் இருக்கும். சிம்பன்சியின் ஒரு நம்ப முடியாத வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. சிம்பன்சியுடன் புகைப்படம் எடுப்பதற்காக ஒரு பெண் காட்டுக்குள் வருவதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த பெண் சிம்பன்சியின் அருகில் அமர்ந்த உடனேயே, அந்த சிம்பன்சி பெண்ணை பற்றிக்கொண்டு அவருக்கு முத்தம் கொடுக்கிறது. 

முத்தமிட ஆரம்பித்த சிம்பன்சி 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், பெண் சிம்பன்சியின் அருகில் வந்தவுடனேயே சிம்பன்சி அவருக்கு முத்தமிடத் தொடங்குவதை காண முடிகின்றது. சிம்பன்சியின் இந்த செயலால் பெண் ஒரு நிமிடம் திகைக்கிறார். சிம்பன்சியின் ஆச்சர்யமான செயல்களைப் பார்த்து பெண் சிரித்துக் கொண்டே இருக்கிறார். இந்த வீடியோ பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர் 

நெட்டிசன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இந்த வீடியோவில் பெண்ணிடம் சிம்பன்சி செய்யும் செயல்களை கண்டு நெட்டிசன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோவிற்கு தொடர்ந்து பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இது naturalpixm என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கிஸ் கொடுத்து அதிர்ச்சியளித்த சிம்பன்சியின் செயலை வீடியோவில் காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by natural video (@naturepixm)

இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் வந்தவண்ணம் உள்ளன. இணையவாசிகளால் சிம்பன்சியின் செயலை நம்ப முடியவில்லை. ஒரு சிம்பன்சி இப்படி கூட செய்யுமா என்ற விதத்தில் பயனர்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். இந்த சிம்பன்சி செய்யும் செயல்கள் வீடியோவை பார்ப்பவர்களை சிரிக்க வைப்பதோடு, அதிர்ச்சியிலும் ஆழ்த்துகிறது. 

மேலும் படிக்க | முதலாளியின் மரணத்தால் கதறி அழுத கன்று: கண்கலங்கிய நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News