அன்றாடம் இணையத்தில் உலவும் பல காட்சிகள் நம்மை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது, அதில் சிறப்பான தரமான வீடியோக்கள் வைரலாகி விடுகின்றன.  மனிதர்களின் வேடிக்கையான செயல்கள், விலங்குகளின் வீடியோக்கள், குழந்தைகளின் செயல்கள் பலவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 
அந்த வகையில் தற்போது ஒரு குழந்தையின் வியக்கத்தக்க செயல் இணையத்தில் ஏராளமானோரை ஈர்த்து வருகிறது.  பெற்றோர்களிடம் தின்பண்டங்களை கேட்டு குழந்தைகள் அடம்பிடிக்கும் நிலையில், இங்கு ஒரு குழந்தை தனக்கான உணவை தானே தயார் செய்து கொள்ளும் காட்சி அனைவரையும் ரசிக்க செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பூனையுடன் கண்ணாம்மூச்சி விளையாடிய பச்சைக்கிளி! வைரலாகும் வீடியோ!


இந்த வீடியோ ஜஸ்ட் பேபி என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் அழகிய பெண் குழந்தை ஒன்று பிங்க் கலரில் ஜம்பர் அணிந்துகொண்டு கிச்சனுக்குள் செல்கிறது.  ஒரு தர்பூசணி பழத்தை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு போய் அதனை பிரஷால் நன்கு தேய்த்து கழுவுகிறது.  பின்னர் அந்த தர்பூசணி பழத்தை எடுத்து காய்கறி, பழங்கள் போன்றவற்றை நறுக்க பயன்படுத்தும் தட்டில் வைக்கிறது.  பின்னர் கீழே உள்ள அலமாரியை திறந்து அதிலிருந்து கத்தியை எடுத்து தர்பூசணி பழங்களை உண்பதற்கு ஏற்ப சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு, அந்த கத்தியை மீண்டும் சுத்தமாக கழுவிவிட்டு எந்த இடத்தில இருந்ததோ அதே இடத்தில வைத்து விடுகிறது.  அதனை தொடர்ந்து நறுக்கி வைத்திருந்த தர்பூசணி துண்டுகளை ஒரு தட்டில் எடுத்து வைத்துவிட்டு, பழம் நறுக்கிய இடத்தை ஒரு துணியால் சுத்தம் செய்கிறது.  பின்னர் அந்த தட்டை எடுத்து சென்று ஒரு சேரில் அமர்ந்து ஸ்பூன் வைத்து உற்சாகமாக அந்த பழங்களை அந்த அந்த சிறுமி விரும்பி உண்ணுகிறாள்.


 



இதுவரை இந்த வீடியோவை 72.1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவை  3.5 மில்லியன் பயனர்கள் லைக் செய்துள்ளதோடு, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் காமெடி செய்துள்ளார்கள்.  இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  இந்த வீடியோவிற்கு ஒரு பயனர், 'இது மிகவும் அழகாக இருக்கிறது' என்றும், மற்றொருவர் பயனர் , 'அந்த சிறுமி சாப்பிடத் தொடங்கும் முன் செய்யும் சிறிய நடன அசைவு மிகவும் அழகாக இருக்கிறது' என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.


மேலும் படிக்க | ஜாக்கிசான் போல காற்றில் பாய்ந்த தேவாங்கு! வைரல் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR