அதிர்ஷ்டம் என்பது ஒருசிலருக்கு கடைசி நேரத்தில் கை கொடுத்து காப்பாற்றிவிடும். எங்காவது இப்படியான நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று, காதால் கேட்கும்போது மனதிற்கு நெகிழ்வாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அப்படியான அதிர்ஷட சம்பவம் கேரளாவில் கடனில் தத்தளித்து சொந்த வீட்டை விற்பனை செய்ய இருந்தவருக்கு நிகழ்ந்துள்ளது. ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்ததால், கடனில் இருந்து மீண்டிருக்கும் அவர், சொந்த வீட்டையும் விற்பனை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கார்; பகீர் வீடியோ


கோழிக்கோட்டைச் சேர்ந்த முகமது பாவா என்பவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆன நிலையில், எஞ்சிய பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகனை குவைத் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார். அப்போது, மகனை குவைத்துக்கு அனுப்புவதற்காக முகமது பாவா ஏராளமான கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. 


அந்த பணத்தில் சொந்தாக வீடு ஒன்றையும் அவர் கட்டியிருக்கிறார். ஒருகட்டத்தில் உறவினர்கள், வங்கி என வாங்கிய கடன் 50 லட்சத்தைக் கடந்து தொந்தரவும் அதிகரித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க தான் ஆசையாகக் கட்டிய வீ்ட்டை ரூ.40 லட்சத்துக்கு விற்க பாவா முடிவு செய்துள்ளார். பல்வேறு இடைத்தரகர்களிடமும் பாவா பேசியிருந்தார். வீடு விற்பனை செய்த பின்பு வாடகைக்கு செல்வதற்கு தயாராக வீடு ஒன்றையும் அவர் பார்த்து வைத்திருந்துள்ளார். இத்தகைய கடினமான சூழலில் தான் அவர் வாங்கி வைத்த ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்தது. ஆம், ஒரு கோடி ரூபாய் பரிசு லாட்டரியில் இவருக்கு பரிசு விழுந்துள்ளது. 


இந்த தகவலால் மகிழ்ச்சியடைந்த ஒட்டுமொத்த பாவா குடும்பத்தினர், வீடு விற்பனை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். வரி உள்ளிட்ட பிடித்தம் போக அவருக்கு 63 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதனை வைத்து ஒட்டுமொத்த கடனையும் அடைத்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுத்துள்ளார் பாவா.  


மேலும் படிக்க | ‘இவ்ளோ பெருசா இருந்தா எப்படி?’: மணமகளுக்கு வந்த சோதனை, வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ