Viral Video : திருமண விழா மேடையில் நடனம்... அப்படியே மயங்கி விழுந்த பெண் மரணம்
திருமண விழாவின் நிகழ்வில் நடனமாடி கொண்டிருந்தபோது, மயங்கிவிழுந்த பெண் ஒருவர் உயிரிழந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் இதய பிரச்சனையால் பலரும் இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதிலும், விழாக்களில் நடனமாடிக்கொண்டிருக்கும் போது, மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது என பொது நிகழ்ச்சிலேயே இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அப்படி பொது நிகழ்ச்சிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அதனை நிச்சயம் ஒருவர் தனது செல்போனிலோ அல்லது கேமாராவில் வீடியோ எடுக்கின்றனர். அந்த வீடியோக்கள் அடுத்த சில நாள்களில் உங்கள் உள்ளங்கை திரையில் வந்து திடுக்கிட வைக்கும்.
மேலும் படிக்க | பூனையின் வாலில் பற்றிய தீ; பரிதவிக்கும் நாய்; மனம் நெகிழ வைக்கும் வீடியோ!
அதேபோன்ற நிகழ்வுதான், தற்போதும் நிகழ்ந்துள்ளது. அதன் வீடியோவும் தற்போதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த பெண் ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடனமாடும் மேடையில், அந்த பெண் விழுந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.
மேடையில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அங்கு மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த பெண் மேடையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் சியோனியில் உள்ள பக்காரி கிராமத்தில் நேற்றிரவு (டிச 14) இச்சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில் 4,5 பெண்கள் தரையில் நடனமாடுவது தெரிகிறது. அப்போது, 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தரையில் விழுந்தார். மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ஆசையாய் ஊட்டி விட்ட மணமகன், வெச்சி செஞ்ச மணமகள்: ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ