`யாருப்பா நீங்கல்லாம், எங்கிருந்து வர்றீங்க?`: சிரிப்பை அடக்க முடியாமல் கேட்கும் நெட்டிசன்கள்
Viral Video: நாம் பார்த்து வியக்கும் பல வீடியோக்களை இணையத்தில் காண்கிறோம். இவற்றை பார்த்து, இப்படி கூட நடக்குமா என நாம் நினைப்பதுண்டு.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நாம் பார்த்து வியக்கும் பல வீடியோக்களை இணையத்தில் காண்கிறோம். இவற்றை பார்த்து, இப்படி கூட நடக்குமா என நாம் நினைப்பதுண்டு. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இதை பார்த்த இணையவாசிகளுக்கு ஆச்சரியமே மேலோங்கி உள்ளது. இதைப் பார்த்து மக்களால் சிரிக்காமலும் இருக்க முடியவில்லை.
வீடியோவில், ஒரு வீடு தீப்பற்றி எரிவதை காண முடிகிறது. இதனால் பதட்டமாக மக்கள் இங்கும் அங்கும் ஓடுகிறார்கள், தீயை அணைக்க முயற்சிக்கிறார்கள். இதற்கிடையில், ஒரு நபர் ஒரு பாட்டிலில் தண்ணீரை எடுத்து வந்து நெருப்பை நோக்கி வீசுகிறார். இது மிக வினோதமாக அனைவருக்கும் தோன்றுகிறது.
கொழுந்துவிட்டு எரியும் அந்த தீயை பாட்டில் நீர் கொண்டு அணைக்கலாம் என அவர் எண்ணியதே அனைவருக்கும் வியப்பை தந்து சிரிப்பை வரவழைக்கிறது. பாட்டிலில் தண்ணீர் ஊற்றிய நபரை பார்த்து மற்றொருவர் வருகிறார். அவர் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து வந்து எரியும் வீட்டுக்கு பதிலாக மறுபக்கம் வீசுகிறார். இருவரின் இந்த வேடிக்கையான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | குறட்டை விட்டு தூங்கும் டீச்சர், விசிறும் மாணவி: ஷாக் ஆன நெட்டிசன்கள்
தீயை அணைக்கும் வினோத அறிவாளிகள்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பகுதியில் வீடு ஒன்று தீ பற்றி எரிவதை காண முட்கின்றது. பலர் அதை அணைக்க பல்வேறு வழிகளைக் கையாள்கிறார்கள். ஆனால் தீ மேலும் வலுவடைகிறது. இதற்கிடையில், ஒரு நபர் ஒரு பாட்டிலில் தண்ணீரைக் கொண்டு வந்து நெருப்பு பற்றி எரியும் வீட்டை நோக்கி வீசுகிறார்.
அது மிகவும் வினோதமாக உள்ளது. அதை மிஞ்சும் வகையில் மற்றொருவர், ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து எரியும் வீட்டின் மீது வீசாமல், மறுபக்கம் வீசுகிறார். இருவரின் இந்த செயலைக் கண்டு அங்கு இருப்பவர்கள் வியப்படைகிறார்கள். வீடியோவில் இதை பார்த்த இணையவாசிகளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தீயணைக்கும் அறிவாளிகளின் வீடியோவை இங்கே காணலாம்:
இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க மாட்டீர்கள்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், இந்த இருவரும் செய்யும் அட்டகாசங்களை போல வழக்கமாக பார்க்க கிடைப்பதில்லை. இந்த வீடியோ 18plusguyy என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த வீடியோவுக்கு பல ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். ஒரு பயனர், 'எங்கிருந்துயா வரீங்க நீங்கல்லாம்?’ என்று கேட்டுள்ளார்.
மேலும் படிக்க | குறட்டை விட்டு தூங்கும் டீச்சர், விசிறும் மாணவி: ஷாக் ஆன நெட்டிசன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR