மழையில் மஜாவாக விளையாடும் யானைக்குட்டியின் அழகான வீடியோ!

மழையில் பெரிய யானையும், யானைக்குட்டியும் நனைந்துகொண்டு விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 6, 2022, 06:02 PM IST
  • மலையில் ஜாலியாக விளையாடும் குட்டியானை.
  • அம்மா யானையும் சேர்ந்து தண்ணீரில் விளையாடுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
மழையில் மஜாவாக விளையாடும் யானைக்குட்டியின் அழகான வீடியோ! title=

யானைகள் பார்ப்பதற்கு அளவில் பெரியதாக தோன்றினாலும், அவற்றின் செயல்கள் பார்ப்பதற்கு குழந்தைகள் செய்யும் குறும்புகளை போல அழகாக தெரிகிறது.  இணையத்தில் அன்றாடம் பகிரப்படும் பலவிதமான வீடியோக்கள், நம்மை வியக்கவைக்கும் விதமாகவும், ரசிக்க வைக்கும் விதமாகவும், மனதை இதமாக்குவது போன்றும் அமைந்து இருக்கிறது.  தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள ஒரு வீடியோவில் யானை மற்றும் யானைக்குட்டி மழையில் ஆனந்தமாக நனைந்து கொண்டு சேற்றில் விளையாடும் காட்சி ரசிக்கும்படியானதாக அமைந்து இருக்கிறது.

மேலும் படிக்க | என்னடா இது சூனா பானாவுக்கு வந்த சோதனை - பந்தை கவ்வ திணறும் நாய்க்குட்டியின் வைரல் வீடியோ 

ட்விட்டரில் கிரியேச்சர் நேச்சர் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த அற்புதமான வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு நிலப்பரப்பில் சில யானைக்கூட்டங்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு இருக்கின்றன, அதில் இரண்டு யானைகளின் செயல் தான் தற்போது வைரலாகியுள்ளது.  அந்த பகுதியில் மழை பெய்துகொண்டு இருக்கிறது, மழை நீர் அந்த புல்தரையை சூழ்ந்து ஒரு சிறிய குட்டை போல இருக்கிறது.  அந்த நீரில் குட்டியானை உருண்டு புரண்டு ஆனந்தமாக விளையாடுகிறது, அதனருகில் மழையில் நனைந்துகொண்டு பெரிய யானை ஒன்று மலையில் நனைந்து நின்றுகொண்டு இருக்கிறது.  அந்த பகுதியும் இயற்கை எழிலுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

 

இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் 'இது விளையாடும் நேரம்' என்ற கேப்ஷனும் சேர்த்து பதிவிடப்பட்டு இருக்கிறது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு நூற்றுக்கணக்கான லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | தில்லாலங்கடி கில்லாடி, திருதிருவென விழித்த போலீஸ்: வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News