குறட்டை விட்டு தூங்கும் டீச்சர், விசிறும் மாணவி: ஷாக் ஆன நெட்டிசன்கள்

Funny Viral Video: ஆசிரியையின் தூக்கம் கலையாமல் இருக்க, ஒரு மாணவி தொடர்ந்து அவருக்கு வீசிக்கொண்டிருக்கிறார். ரகசியமாக ஒருவர் இந்த ஆசிரியையின் தூக்கத்தை வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 7, 2022, 03:04 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
குறட்டை விட்டு தூங்கும் டீச்சர், விசிறும் மாணவி: ஷாக் ஆன நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் வகுப்பில் குறும்பு செய்வதையும், ஆசிரியர்கள் அவர்களை அடக்க முடியாமல் அவதிப்படுவதையும் பார்த்துள்ளோம். சில பள்ளிகளில் மாணவர்கள் என்னதான் குறும்பு செய்தாலும், அதை கண்டுகொள்ளாமல் ஆசிரியர்கள் பிற வேலைகளில் ஈடுபட்டுள்ளதையும் பார்த்துள்ளோம். சில இடங்களிலோ ஆசிரியர்கள் அமைதியாக ஓய்வெடுப்பதையும் சொந்த வேலைகளில் ஈடிபடுவதையும் கூட பார்த்துள்ளோம்.

மேலும் படிக்க | மணமகள் மீது பைத்தியம் ஆன மணமகனின் குத்தாட்டம்: வைரல் வீடியோ 

இப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மிகவும் சுகமாக உறங்கிக் கொண்டிருக்க, மாணவி ஒருவர் கைவிசிறி ஒன்று கொண்டு அவருக்கு விசிறி விடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதை யாரோ ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது மிக வேகமாக இணையத்தில் பரவி வருகிறது. 

வகுப்பிலேயே உறங்கிப்போன ஆசிரியை 

இந்த வீடியோவில் காணப்படுவது போல் நாட்டின் பல அரசுப் பள்ளிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. பள்ளியில் அனைத்து குழந்தைகளும் படித்துக்கொண்டிருப்பதையும், ஆசிரியர் நாற்காலியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஆசிரியை ஒரு மாணவியை தனது தூக்கத்துக்கு உதவும் வகையில், கைவிசிறியால் வீச சொல்லியிருப்பது இன்னும் கொடுமையான விஷயமாகும்.

ஆசிரியையின் தூக்கம் கலையாமல் இருக்க, மாணவி தொடர்ந்து அவருக்கு வீசிக்கொண்டிருக்கிறார். ஆனால், ரகசியமாக ஒருவர் இந்த ஆசிரியையின் தூக்கத்தை வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். 

வகுப்பறையில் தூங்கும் ஆசிரியரின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Baat Bihar Ki (@baatbiharki)

ஆசிரியரின் செயலைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்

இந்த வீடியோ பீகாரில் ஒரு பள்ளியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த வீடியோ baatbiharki என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. "ஆசிரியர் நிம்மதியாக தூங்குகிறார், பீகாரில் குழந்தைகளின் எதிர்காலத்தை இருளில் தள்ளுகிறார்!" ஒரு பயனர் இதற்கு கமெண்ட் அளித்துள்ளார். 

“ கற்பிக்க கடினமாக உழைக்கும் ஆசிரியர்” என்று ஒரு பயனர் கிண்டல் செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | தில்லாலங்கடி கில்லாடி, திருதிருவென விழித்த போலீஸ்: வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News