வெள்ளத்தில் தத்தளித்த நாயை ஜேசிபி கொண்டு காப்பாற்றும் வீரர்!
நாய் ஒன்று வெள்ளத்தில் சிக்கி நீரில் அடித்து சென்றபோது ஒருவர் அதனை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது மனதையும் நெகிழ செய்துள்ளது.
வெள்ளத்தில் சிக்குவோரை காப்பாற்ற அதிகாரிகள் தேவையில்லை, நல்ல மனம் இருந்தால் போதும் என்பதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்ட நாயை ஒருவர் துணிச்சலாக காப்பாற்றி கரை சேர்க்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற இடர்பாடு சமயங்களில் பலரும் மனிதர்களை மட்டும் காப்பாற்றும் நோக்கில் தான் துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டெடுப்பார்கள், அதன் பின்னர் தான் விலங்குகளை காப்பாற்றுவதில் கவனத்தை செலுத்துவார்கள். ஆனால் இந்த நபர் சிறப்பாக செயல்பட்டு நாயை காப்பாற்றியது பலரது மனதையும் நெகிழ செய்து இருக்கிறது.
இந்த வைரல் வீடியோவை ட்விட்டரில், விகாஸ் பிரகாஷ் சிங்க் ஐஆர்எஸ் என்பவர் பாராட்டி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், குறுகலான ஒரு இடத்தில் பல குப்பைகூளங்களை சுமந்துகொண்டு வேகமாக வெள்ள நீர் ஓடுவதை காண முடிகிறது. அதனுள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஒருவர் இயந்திரத்தின் அந்த கை போன்ற பகுதிக்குள் அமர்ந்து இருக்கிறார், அப்போது அந்த நீரில் வேகமாக அடித்து வரும் நாயை துரிதமாக செயல்பட்டு தூக்கி தன்னோடு வைத்து கொள்கிறார். பின்னர் இயந்திரத்தை ஓட்டுபவர் மெல்லமாக அவர்களை வெளியே கொண்டு வந்து விடுகிறார். பின்னர் அவர் நாயை கீழே தரையில் இறக்கிவிட்டு விட்டு, அவரும் இறங்குவதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.
இவரின் செயலை இணையத்தில் கண்ட நெட்டிசன்கள் அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த அதிகாரி 'எல்லா வீரர்களும் கேப் அணிந்திருக்கமாட்டார்கள்' என்கிற ஒரு புகழ்ச்சியான தலைப்பையும் வீடியோவுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் ரசித்திருக்கும் இந்த வீடியோவானது வைரலாகி வருவதுடன், அந்நபருக்கு ப்பார்த்து மழை பொழிந்து வருகின்றது.
மேலும் படிக்க | கோழிக்குஞ்சுக்காக சண்டையிடும் 2 பாம்புகள்: வென்றது யார்? வைரல் வீடியோவில் விடை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR