விளையாட்டுகள் பலவிதம். வீட்டில் இருக்கும்போது புதுமையான முயற்சிகைளையும் விளையாட்டுகளை பலரும் விளையாடுவதுண்டு. அது நல்ல பொழுதுபோக்காக இருப்பது மட்டுமின்றி, மன ஆரோக்கியத்துக்கும் முக்கியமானதாக இருக்கும். அப்படியான விளையாட்டுகள் அக மகிழ்ச்சியையும் அதிகம் கொடுக்கும். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் சிறுபிள்ளைத் தனமாக விளையாடும் விளையாட்டுகள் உண்மையிலேயே அதிக மகிழ்ச்சியை கொடுப்பவையாக இருக்கும். வழக்கமாக விளையாடும் விளையாட்டை கொஞ்சம் சிறுபிள்ளைதனமாக விளையாடினால், நிச்சயம் காமெடி கலாட்டா இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Pic Puzzle: 10 வினாடிகளில் பெண்ணின் கொலையாளியை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!


அப்படி ஒருவர் வீட்டில் பொழுது போகவில்லை என்பதற்காக சிறிய சைக்கிள் ஒன்றை எடுத்துக் கொண்டு ரைடிங் செல்கிறார். ரைடிங் செல்வதோடு அவர் இருந்திருந்தால் பரவாயில்லை. அதில் கொஞ்சம் சிறுபிள்ளை சேட்டைத் தனத்தை செய்ய முயற்சிக்கிறார். அதாவது பைக்கிள் சாகசம் செய்ய வீலீங் முயற்சி பண்ணுவதைபோல் சைக்கிளில் வீலிங் முயற்சிக்கிறார். அது அவருக்கு சரியாக வரவில்லை. மாறாக, சைக்கிளில் கைப்பிடி உடைந்து அந்தரத்தில் கீழே விழும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்த வீடியோ காண்போருக்கு பெரும் நகைப்பை ஏற்படுத்தி வருகிறது.



வீட்டில் இருந்து சைக்கிளை எடுத்து வரும்போது அதன் நிலையை கொஞ்சம் பார்த்திருக்கலாம். அல்லது அவர் சைக்கிள் என்பதால் அதனுடைய நிலை நிச்சயம் அவருக்கு தெரிந்திருக்கும். அதனால் அத்தகைய விபரீத முயற்சிகளை கைவிட்டிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யாததால் பொதுவெளியில் சாகசம் செய்கிறேன் என முயற்சித்து கீழே விழுந்து எழுந்தது தான் மிச்சம். டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். 


மேலும் படிக்க | பைக்குல யாரு கொஞ்சம் பாரு: பின் சீட்டில் எருதுடன் அசால்டாய் பைக் ஓட்டும் நபரின் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ