Pic Puzzle: 10 வினாடிகளில் பெண்ணின் கொலையாளியை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

Brain Teasers: பல வகையான ஒளியியல் மாயை புகைப்படங்கள். சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை நம் மூளைக்கு சிறந்த வேலை கொடுப்பவை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 13, 2022, 06:40 PM IST
  • மூளைக்கும் பயங்கர வேலை கொடுக்கும் ஒளியியல் மாயை அல்லது படப்புதிர்.
  • கூர்ந்து கவனிக்கும் போது, பல விஷயங்கள் புலப்படும்.
  • பெண்ணின் கொலையாளியை சிலரால் மட்டுமே அடையாளம் காண முடிந்தது.
Pic Puzzle: 10 வினாடிகளில் பெண்ணின் கொலையாளியை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! title=

Brain Teasers: பல வகையான ஒளியியல் மாயை புகைப்படங்கள். சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை நம் மூளைக்கு சிறந்த வேலை கொடுப்பவை. உஙக்ள் மூளையின் செயல்திறனையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த புதிர்களில் சிலவற்றை தீர்க்கும் போது, சில சமயங்களில், ​​நமக்கு பதிலை கண்டுபிடிக்க முடியாமல் குழப்பமாக இருக்கும். அத்தகைய புகைப்பட புதிர்கள் அல்லது ஒளியியல் மாயை புகைப்படங்களை பெரும்பாலானோர் மிகவும் விரும்புகின்றனர். பலர் இந்தப் புதிரைத் தீர்க்க கடுமையாக முயற்சி செய்கின்றனர், ஆனால் ஒரு சிலரால் மட்டுமே இந்தப் புதிர்களைத் தீர்க்க முடிகிறது.

இங்கே கொடுக்கப்பட்ட புகைப்பட புதிரில், நீங்கள் ஒரு உணவகத்தைப் காணலாம். அதன் குளியலறையில் ஒரு பெண்ணின் உடலையும் காணலாம். அதன் கொலையாளியைத் நீங்கள் தேட வேண்டும். இந்த புகைப்படத்தில் சரியான பதிலைக் கண்டுபிடிப்பதற்கு முன், உங்கள் மொபைல் ஃபோனில் 10 வினாடிகளுக்கு டைமரை அமைக்க மறக்காதீர்கள். இந்தப் புகைப்படத்தை உன்னிப்பாகப் பார்ப்பதன் மூலம், உங்களால் சரியான பதிலை கண்டுபிடிக்க முடியும்.

சரியான பதில் கண்டுபிடிப்பதில் சிரமத்தை எதிர்கொள்பவர்களுக்கு , நாங்கள் உங்களுக்கு சில குறிப்புகளை தருகிறோம். இந்த ஐந்து சந்தேக நபர்களில் ஒருவர் தான் கொலையாளி. இது தவிர, குளியல் அறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் பெண்ணின் கையில் ஒருவரின் சட்டையின் கிழிந்த துண்டு தென்படும். கூர்ந்து கவனித்தால், அங்கே சாப்பிடும் நபர் ஒருவரின் சட்டை கிழிந்திருப்பதைக் காணலாம். இன்னும் உங்களால் கொலையாளியை கண்டுபிடிக்க முடிந்திருக்கும்.

மேலும் படிக்க | புதிர்: படத்தில் ஒளிந்திருக்கும் 8 விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்

கொலையாளி எண். 4 என்ற நபர் தான். ஏனெனில் அவனது கழுத்தில் ரத்த காயம் இருப்பதையும் காணலாம். அவர் ஓய்வறைக்கு மிக அருகில் இருக்கிறார், அவரது கத்தியும் காணவில்லை. அவரது சட்டையின் ஒரு பகுதி பெண்ணின் கையில் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் இந்தப் புதிரைத் தீர்க்கக்கூடிய கில்லாடிகளில் நீங்களும் ஒருவரா? இத்தகைய ஒளியியல் மாயைகள் அல்லது புகைப்படப் புதிர்கள், சமூக ஊடக பயனர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றன.

மேலும் படிக்க | Picture Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடிகிறதா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News