பைக்குல யாரு கொஞ்சம் பாரு: பின் சீட்டில் எருதுடன் அசால்டாய் பைக் ஓட்டும் நபரின் வீடியோ வைரல்

Funny Viral Video: பைக்கில் எருது ஒன்றை பின்னால் வைத்துக்கொண்டு அசால்டாக வண்டி ஓட்டிச்செல்லும் நபரின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 13, 2022, 05:25 PM IST
  • பைக்கில் எருதுடன் சவாரி செய்யும் நபர்.
  • வேகமாக பைக் ஓட்டி அசத்தல்.
  • வைரலான வீடியோ.
பைக்குல யாரு கொஞ்சம் பாரு: பின் சீட்டில் எருதுடன் அசால்டாய் பைக் ஓட்டும் நபரின் வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இணையத்தில் நம்மை சிரிக்க வைக்கும் பல வேடிக்கையான வீடியோக்கள் நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு கேளிக்கை வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு நபர் தனது பைக்கில் எருது ஒன்றை எடுத்துச் செல்வதைக் காண முடிகின்றது. 

வேடிக்கையாகத்  தோன்றும் இந்த வீடியோவில், அந்த நபர் பைக்கில் மாட்டை கயிற்றால் கட்டி பின் இருக்கையில் வைத்திருப்பதை காண முடிகின்றது. இதற்கிடையில், அவர் பைக்கை முழு வேகத்தில் ஓட்டுவதையும் காண முடிகின்றது. அதே நேரத்தில் எருது பைக்கில் மிகவும் வசதியாக அமர்ந்திருப்பதைப் போலத் தோன்றுகிறது. 

மேலும் படிக்க | Horrifying Video: தானாக இயங்கிய கார்... பழுது பார்ப்பவரை மோதி நசுக்கிய பயங்கரம்! 

பைக்கை வேகமாக ஓட்டினாலும், பைக் டிரைவர் மிக அற்புதமாக சமநிலையை பராமரிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வினோதமான காட்சியை அந்த வழியாக சென்ற சிலர் தங்களது மொபைல் போனின் கேமராவில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர். 

இன்ஸ்டாகிராமில் இந்த விடியோ animalsinthenaturetoday என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

டூ வீலரில் எருதுடன் சவாரி செய்யும் சூப்பர் டிரைவரிம் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ கலவையான கமெண்டுகளைப் பெற்றுள்ளது. சில பயனர்கள் இதைப் பார்த்து மகிழ்ந்தாலும், மற்றவர்கள் எருது கட்டப்பட்டிருக்கும் நிலையை பார்த்து கவலை கொண்டனர். ஒரு பயனர் தனது கமெண்டில், “இணையத்தில் நாம் பல வித அற்புதமான விஷயங்களைக் காண்கிறோம்.” என்று எழுதியுள்ளார். ‘மிக அற்புதமான சமநிலையுடன் இவர் வண்டி ஓட்டுகிறார்’ என மற்றொருவர் ஓட்டுனரை புகழ்ந்துள்ளார்.

’இது ஹோண்டா வண்டி. இதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்’ என ஒருவர் வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார். ‘சூப்பரான அனிமல் டாக்சி’ என ஒருவர் கமெண்ட் செய்ய, மற்றொருவரோ, ‘இது வேடிக்கையான விஷயம் அல்ல, அந்த விலங்கின் நிலையை நினைத்துப் பார்க்க வெண்டும்’ என கவலை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.

மேலும் படிக்க | Video: ஆசிரியையின் கோபத்தை காதல் முத்தத்தால் தணித்த சுட்டி குழந்தை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News