11 வினாடிகளில் 100 மீட்டர் ஓடுவதாகக் கூறிய இளைஞர் வேக சோதனையில் தோல்வி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உசேன் போல்ட்டுக்கு அடுத்தது இந்தியாவின் ராமேஸ்வர் குர்ஜார் என்று கூறப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த ஒரு வீடியோவில், அவர் 100 மீட்டர் தூரத்தை வெறும் 11 வினாடிகளில் கடந்துள்ளதை காட்டியுள்ளது. ஆனால், போபாலின் டிடி ஸ்டேடியத்தில் நடத்தப்பட்ட வேக சோதனையில் அவர் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. 


TT ஸ்டேடியத்தில் ராமேஸ்வர் மீது நியாவறது கண்களும் இருந்தது. 
ஏனெனில், அவரது வேகம் அனைவரையும் கவர்ந்தது. சோதனையின் இறுதியில்  வேக சோதனையை முடித்த அவர், 100 மீட்டர் ஓட 12.9 வினாடிகள் எடுத்துக்கொண்டதாக கடிகாரம் காட்டியுள்ளது. சோதனைக்குப் பிறகு, ராமேஸ்வர் வெறுங்காலுடன் ஓடுவது தனது வேகமான நேரத்திலிருந்து விலைமதிப்பற்ற வினாடிகளைத் தக்கவைக்க உதவக்கூடும் என்று கூறினார். அவர் தனது கால்களிலும் முதுகு தசைகளிலும் வலியை அனுபவித்து வருவதால் அவர் மற்றொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்றும் தெரிவித்துள்ளனர்.



அவர் ஓடும் வீடியோ ஆன்லைனில் வைரலாகியதை தொடர்ந்து, குர்ஜார் வேக சோதனைக்கு மத்திய பிரதேச விளையாட்டு அமைச்சரால் அழைக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இந்த வீடியோவை ட்வீட் செய்திருந்தார், மத்திய விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜுவை ராமேஸ்வரருக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.


இதை தொடர்ந்து ராமேஸ்வர் இப்போது போபாலில் உள்ள ஒரு அகாடமியில் ஒரு மாதம் பயிற்சி பெறுவார். இவருக்கு மற்றொரு வேக சோதனை மாத இறுதியில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.