ABVP ஊழியரின் காலில் விழுந்த பேராசிரியர்: ஏன்? பார்க்க வீடியோ
ABVP ஊழியரின் கால்களைப் பிடித்து ஏன் பேராசிரியர் மன்னிப்பு கேட்டார். என்ன நடந்தது என்பதை அறிய வீடியோவைப் பார்க்கவும்.
மத்தியப்பிரதேசத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது. அதில் ஒரு பேராசிரியர் ஏ.பி.வி.பி. ஊழியரின் காலில் விழுந்து பாதங்களை தொட்டு மரியாதையை செலுத்தினார்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள மண்ட்சோர் பகுதியில் அமைத்துள்ள PG கல்லூரியில் ABVP ஊழியரின் ஒருவர் உரையாற்ற சென்றிருந்தார். ஆனால் கல்லூரியில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கல்லூரி முன்பு நின்று முழக்கங்கள் எழுப்பினர்.
இதற்க்கான காரணம் என்னவெனில், கடந்த புதன்கிழமை (நேற்று) ABVP ஊழியர்கள் பிஜி கல்லூரியில் உள்ள வகுப்பு அறைக்கு முன்பு கோசங்கள் எழுப்பியுள்ளனர். அப்பொழுது தனது அறையில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் தினேஷ் குப்தா, ABVP மாணவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. அது மட்டுமல்லாமல், ABVP அமைப்பை சேர்ந்தவர்கள் "தேசவிரோத வழக்கு" உங்கள் மீது போடுவோம் என பேராசிரியரை மிரட்டி உள்ளனர்.
அப்பொழுது காந்தியின் வழியை தேர்ந்தெடுத்த பேராசிரியர், ABVP அமைப்பை சேர்ந்தவர்களின் கால்களை பிடிக்க முற்ப்பட்டார். இதைப்பார்த்த அவர்கள், அங்கிருத்து நகர தொடங்கியுள்ளனர். ஆனாலும் பேராசிரியர், அவர்களை விடாமல் கல்லூரியின் நுழைவாயில் வரை சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.