ஐக்கிய நாடுகளின் மாசசூசெட்ஸ்-ன் பூக்கடை ஊழியர் ஒருவரின் பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவிழா காலங்களில் சிறுகடை வியாபாரிகள் தங்கள் கடை பொருட்களை விற்பதற்காக பல யுக்திகளை கையாண்டு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்தாண்டு கிருஸ்துமஸ் பண்டிகையின் போது மாசசூசெட்ஸ் நகரின் பூக்கடை ஒன்றில் தங்கள் கடை பூக்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அக்கடை ஊழியர் ஒருவர் பாடல் பாடி அனைவரது கவனத்தினையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.


இந்த பாடல் அப்போது இணையத்தில் பிரபலமாகும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் தற்போது இந்த பாடல் பேஸ்புக்கில் 2.5 மில்லியல் பார்வையாளர்களை பெற்றுள்ளது.


காரணம் அந்த பாடலை பாடியவரின் அற்புதமான, கம்பீரமான குரல். 23 வயதுடைய அந்த வாலிபர் தனது பாடகர் கனவினை இந்த தருனத்தில் நிவர்த்தி செய்துக்கொண்டுள்ளார்.


இந்த காந்தக்குரல் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் நிறுத்திவிட்டது என்றால் மிகையாகாது. அந்த வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது....