வைரல் வீடியோ : விபத்தில் தூள்தூளான ஸ்கூட்டர், உயிர் பிழைத்த அதிசய மனிதன்
viral accident video : சாலை விபத்தில் சிக்கிய ஸ்கூட்டர் ஒன்று சுக்குநூறாக உடைந்தாலும், அதை ஓட்டி வந்த நபர் பத்திரமாக உயிர் பிழைத்த வீடியோ வைரலாகியுள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோ வைரலாகும் நிலையில், சாலை விபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. சாலை விபத்தில் சிக்கிய ஸ்கூட்டர் ஒன்று சுக்குநூறாக உடைந்தாலும், அதை ஓட்டி வந்த நபர் பத்திரமாக உயிர் பிழைத்துள்ளார். 7 நொடி இருக்கும் வீடியோவில், மழை பெய்து சாலை ஈரமாக இருக்கிறது. இருந்தாலும் வாகனங்கள் எல்லாம் சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. கார்கள் கண் இமைக்கும் நேரத்தில் செல்கின்றன. அந்தநேரத்தில் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனம் ஒன்றும் வேகமாக செல்கிறது.
அந்த வாகனத்தில் சென்றவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, வேகமாக சென்று கொண்டிருந்த காரை ஓவர்டேக் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் அவருக்கு எதிரே ஒரு கார் வேகமாக வருவது தெரியவில்லை. அதுவும் அவர் ஓவர்டேக் எடுத்தது மிகவும் அபாயகரமானதும் கூட. சாலையில் நடுப்பகுதியை கடந்து காரை ஓவர்டேக் செய்ய முயற்சிக்கிறார். அந்தநொடியில் எதிரே வேகமாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. விபத்தில் சிக்கிய ஸ்கூட்டர் சுக்குநூறாக உடைந்துவிட, அதனை ஓட்டிவந்தவர் நல்வாய்ப்பாக எந்த பெரிய அடியும் இல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்.
அவருக்கு ஆயுள் தூரமாக இருந்ததிருக்கிறது என்றே சொல்ல முடியும். ஏனென்றால் கார் மோதிய வேகத்துக்கு அவர் சிக்கியிருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பெல்லாம் இல்லை. அவருக்கு இந்த விபத்தில் இன்னொரு பிறவி கிடைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம். இந்த வீடியோ மட்டும் இப்போது எக்ஸ் உள்ளிட்ட பக்கங்களில் அதிக பார்வைகளை பெற்று வருகிறது.
உலகிலேயே சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. அரசும் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தனிமனிதர்கள் அதனை அசால்டாக எடுத்துக் கொள்வதால், விபத்துகளில் சிக்குகின்றனர். சாலை விபத்தில் நாள் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். அதனால் இந்த விபத்து வீடியோவை பார்த்தாவது சாலைகளில் கவனமாக செல்லுங்கள்.
மேலும் படிக்க | “என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ