மிஷன் சக்தி குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முன் தினம் பிரதமர் மோடி மிஷன் சக்தி திட்டம் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா சாதனையை படைத்துள்ளது என்று மோடி குறிப்பிட்டார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. மோடி தனது உரையில் கட்சியின் பெயரையோ, அல்லது சின்னத்தின் பெயரையோ பயன்படுத்தவில்லை என்பதால் இது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலேயே மிஷன் சக்தி ரகசியத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,  விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தைக் காப்பாற்றினார்கள். முட்டாள் அரசாங்கம் மட்டும் அதனை வெளியிடும். பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். 


மேலும், தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் தோல்வி பயம் தான் காரணம் என பதிவிட்டுள்ளார்.