வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 


குரங்குகள் பல மிருகங்களுடன் சண்டையிடுவதை நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். குறிப்பாக, குரங்குகளுக்கும் நாய்களுக்கு இடையில் நடக்கும் சண்டைகளை நாம் பல முறை பார்த்திருப்போம். ஆனால் இரண்டும் சேர்ந்து ஒன்றாக விளையாடுவதை, லூட்டி அடிப்பதை பார்ப்பது மிக அரிது. அப்படி ஒரு அரிய காட்சியை கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. 


குரங்குக்கும் இரு நாய்களுக்கும் இடையில் நடக்கும் வேடிக்கையான விஷயங்களை பார்த்தால் கண்டிப்பாக காண்பவர்களால் மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது. இது நம் மன இறுக்கங்களை தளர்த்தி நம் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும். குரங்கு நாய்களுடம் விளையாடுவது மட்டுமல்லாமல், அவற்றை வம்புக்கும் இழுப்பது இன்னும் வேடிக்கையாக உள்ளது. 


அசத்தலான அந்த குரங்கு வீடியோவை இங்கே காணலாம்


மேலும் படிக்க | குட்டி குரங்குக்கு தாயான பூனையின் கியூட் வீடியோ வைரல்


மனதை அள்ளும் விலங்குகளின் வேடிக்கை


வைரலான இந்த வீடியோவில், வித்தியாசமான பேன்ட் அணிந்த குரங்கு ஒன்று இரண்டு நாய்களுடன் வேடிக்கையாக விளையாடுவதை காண முடிகின்றது. வீடியோவின் துவக்கத்தில் இரண்டு நாய்களும் நிம்மதியாக ஒரு இடத்தில் படுத்திருப்பதை காண்கிறோம். அப்போது அங்கு ஒரு குரங்கு வருகிறது. ஜாலியான மனநிலையில் வரும் குரங்கு அவற்றுடன் விளையாடுகிறது. முதலில் குரங்கு இரண்டு நாய்களையும் எழுப்ப அவற்றை தொந்தரவு செய்கிறது. ஆனால் அவை எழுந்திருக்காததை கண்டு, குரங்கு இரண்டு நாய்களில் ஒன்றின் மீது அமர்கிறது. குரங்கின் வேடிக்கையான செயல்கள் வீடியோவை பார்ப்பவர்களை வெகுவாக மகிழ்விக்கின்றன.


பின்னர் ஒரு நாய்க்கு கோவம் வந்துவிடுகின்றது. அது எழுந்து குரங்கிடம் செல்ல சண்டை செய்கிறது. ஆனால், இரு நாய்களையும் எப்படியோ சமாதானம் செய்யும் குரங்கு, இறுதியாக இரண்டையும் எழுப்பி விடுகிறது. இது மட்டுமல்லாமல், ஒரு நாயின் மீது ஏறி குரங்கு சவாரியும் செய்கிறது.


வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த அசத்தலான வீடியோ Ban Luy என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட வியூஸ்களும் 438K லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல விதமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


குரங்கு மற்றும் நாய்களின் வேடிக்கை நிறைந்த இந்த வீடியோ யூடியூப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஓரு பயனர், “குரங்கு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறது" என்று எழுதியுள்ளார். "நண்பனுக்காக நாய்கள் தூக்கத்தை விட்டுக்கொடுத்தன.. சபாஷ்" என மற்றொரு பயனர் எழுதியுள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | விபத்தில் சிக்கியவர் ஆடியன்ஸாக மாறிய விநோதம்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ