வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதுவும் குறிப்பாக, பாம்பு, குரங்கு, நாய், பூனை, சிங்கம், புலி ஆகிய விலங்குகளுக்கு இணையவாசியகளிடையே அதிக க்ரேஸ் உள்ளது. இந்த விலங்குகளின் வீடியோக்கள் பகிரப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. இந்த வீடியோக்களில் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல விஷயங்களை நாம் காண்கிறோம். இவை நம்மை ஆச்சரியப்படவும் அதிசயிக்கவும்  வைக்கின்றன. சில சமயங்களில் விலங்குகளுக்கு இடையில் உள்ள பந்த பாசமும், பாசப்பிணைப்பும் நமக்கு காணக்கிடைக்கின்றன.


அப்படி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் மான்களுக்கு உணவு கிடைக்க குரங்கு ஒன்று செய்யும் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றது. பொதுவாக குரங்குகள் நிலையாக இருப்பதில்லை. மிக வேகமாக அங்கும் இங்குமாக அலைந்துகொண்டு தான் இவற்றை நாம் பார்த்துள்ளோம். ஆனால், மான்களுக்காக இந்த குரங்கு இத்தனை நிதானமாக, பொறுப்புணர்ச்சியோடு இருப்பதை காண மிகவும் ஆச்சரியமாக உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த வீடியோ பலரை நெகிழ வைத்துள்ளது என்றே கூறலாம். மேலும் இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் பலரது கருத்துகளும் பதிவாகி வருகின்றன. 


மான்களுக்கு உதவிய குரங்கு


வீடியோவில் பூங்கா ஒன்றில் இரண்டு மான்கள் புல் மேய்ந்துகொண்டிருப்பதை காண முடிகின்றது. அப்போது ஒரு மரத்தில் அதிக இலைகள் இருப்பதை காணும் குரங்கு, அந்த மான்கள் அதை உட்கொள்ள ஏதுவாக, மரக்கிளை மீது அமர்ந்து அதை கீழ் நோகி வளைப்பதை வீடியோவில் காணலாம். மானின் வயிறு நிரம்பும் வரை குரங்கு அப்படியே அமர்ந்திருக்கிறது. 


மேலும் படிக்க | நீளமான பாம்பை கொத்தி விழுங்கும் கொக்கு வீடியோ இணையத்தில் வைரல்


வியக்க வைத்த குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:



இணையத்தில் வீடியோ வைரல் ஆனது


இந்த விடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @TansuYegen என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை பார்த்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு இதுவரை 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. 'இது மிகவும் அழகான வீடியோ.' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'ஒருவருக்கொருவர் எவ்வாறு இணக்கமாக வாழ்வது என்பதை விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.' என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 'மற்றவர்களுக்கு உதவுவது மிகப்பெரிய தர்மம்' என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | வைரலாகும் திருட்டு வீடியோ! ஆக்டோபஸின் அற்புதமான திருட்டு? திருடு போனது என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ