வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


ஆனால், தற்போது பரவி வரும் இந்த வீடியோ மிகவும் வித்தியாசமானது. இதில் ஒரு குரங்கு கடையில் தொங்கவிடப்பட்டிருக்கும் தின்பண்டங்களை எடுக்க பல வகைகளில் முயற்சி செய்வதை காண முடிகின்றது. இறுதியாக குரங்கு ஒரு பக்காவான திட்டத்தை தீட்டுகிறது. 


மேலும் படிக்க | ராஜ நாகத்தை உயிருடன் விழுங்கிய பாம்பு: கேமராவில் கைதான திக் திக் நிமிடங்கள்


இந்த குரங்கின் திட்டம் காண்பவர்களை வெகுவாக கவர்கிறது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர், ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். 


நண்பனாகிய நாய் 


வெளியாகியுள்ள இந்த வீடியோ-வில், குரங்கு ஒரு கடைக்கு வெளியே வந்து சிப்ஸ் பாக்கெட்டை திருட திட்டம் தீட்டியதைக் காண முடிகிறது. ஆனால் அந்த சிப்ஸ் பாக்கெட்டை எட்ட அதன் உயரம் போதுமானதாக இல்லை. இதற்குப் பிறகு குரங்கு செய்த செயலை பார்த்து யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. 


சிப்ஸ் பாக்கெட்டை எப்படியாவது எடுக்க வேண்டும் என முடிவெடுத்த குரங்கு நாயின் முதுகில் ஏறிக்கொண்டு அதை எடுக்கிறது. இருப்பினும் குரங்கால் தனது முயற்சியில் வெற்றியடைய முடியவில்லை என்றாலும், அதன் செயலை நெட்டிசன்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். குரங்கு ஒய்யாரமாய் நாயின் முதுகில் ஏறுவதும், படுத்துக்கொள்வதும் காண்பதற்கு அழகாக உள்ளது. 


‘நண்பேண்டா...’ என்ற பாணியில் குரங்கின் திட்டத்துக்கு நாயும் துணை நிற்பது காண்பதற்கு வேடிக்கையாக உள்ளது. 


நாய் மற்றும் குரங்கின் அந்த ஸ்பெஷல் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும் memes.bks என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பிறகு தங்கள் நண்பனின் நினைவு வருவதாகவும் பலர் கமெண்ட் செய்துள்ளனர். 


மேலும் படிக்க | ’சோதிக்காதீங்கடா.....சோதீக்காதீங்க’ நாயின் மைண்ட்வாய்ஸ் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR