Viral Video: இது என் ஏரியா இல்லையே... அவசரமாக சாலையை கடக்கும் முதலை

இணைய தளத்தில் பகிரப்படும் வீடியோக்களில், சில நேரங்களில் நம்பவே முடியாத ஆச்சர்யமான விஷயங்களை காணலாம். அந்த வகையில் முதலை தொடர்பான ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 18, 2022, 04:32 PM IST
Viral Video: இது என் ஏரியா இல்லையே... அவசரமாக சாலையை கடக்கும் முதலை title=

பொதுவாக இணைய தளத்தில், காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அனைத்தும் பதிவிடப்பட்ட உடனேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மிக விரைவில் வைரலாகி விடுகிறது. 

இணைய தளத்தில் பகிரப்படும் வீடியோக்களில், சில நேரங்களில் இரண்டு விலங்குகள் பரஸ்பரம் அன்பைப் பொழிவதைக் காணலாம். சில சமயங்களில் பரஸ்பரம் உக்கிரமாக சண்டையிடுவதைக் காணலாம்.

பெரும்பாலும் சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் மற்ற விலங்குகளைத் தாக்குவதைக் காணலாம். சில நேரங்களில் நம்பவே முடியாத ஆச்சர்யமான விஷயங்களை காணலாம். அந்த வகையில் முதலை தொடர்பான ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

முதலைகள்  நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும். அதன் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம்.  சமூகவலைத்தளங்களில் மிகவும் வரைலாகி வரும் ஒரு வீடியோவில், முதலை ஒன்று 

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், முதலை ஒன்று திடீரென கால்வாயில் இருந்து வெளியே வந்து, சாலையை கடப்பதைக் காணலாம். கால்வாயில் இருந்து வெளியே வந்த முதலை, இது தனது இடம் அல்ல, என்பதை உணர்ந்து கொண்டு வேகமாக சாலையை கடந்து சென்று, திரும்பவும் நீருக்குள் சென்று விடுகிறது.  முதலைக்கு அருகில் பைக் நிற்பதையும் காணலாம். அதிலிருந்து இது மனிதர்கள் நடமாடும் பகுதி என்பது தெரிய வருகிறது. 

மேலும் படிக்க | Viral Video: பாம்பிடம் சிக்கித் திணறும் கன்றுக் குட்டியின் அலறல்; பதற வைக்கும் காட்சிகள்

வைரல் வீடியோவை இங்கே காணலாம்

வைரலான இந்த வீடியோ, helicopter_yatra_ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News