’சோதிக்காதீங்கடா.....சோதீக்காதீங்க’ நாயின் மைண்ட்வாய்ஸ் வைரல் வீடியோ

சோதிக்காதீங்கடா என்ற மைண்ட் வாய்ஸூடன் நாய் குட்டி ஒன்று காருக்குள் அல்லாடும் வீடியோ பார்ப்பவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்துகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2022, 03:25 PM IST
’சோதிக்காதீங்கடா.....சோதீக்காதீங்க’ நாயின் மைண்ட்வாய்ஸ் வைரல் வீடியோ title=

நாய்க்குட்டிகளின் சேட்டைக்கு அளவே இருக்கிறது. எந்த நேரத்தில் எப்படி விளையாடும் என்றெல்லாம் தெரியாது. ஆனால் அவற்றின் சேட்டைகள் நம்மை சீக்கிரம் கவர்ந்துவிடும். ஆஃபீஸில் கடுமையான வேலைகளுக்கு பிறகு வீட்டிற்கு சென்றால், நாய்குட்டிகள் செய்யும் சேட்டையில் இருக்கும் டென்ஷன் எல்லாம் நொடியில் காணாமல் போய்விடும். நீங்கள் அதற்கு பிரியமாக மட்டும் இருந்துவிட்டால் போதும், தினம் தினம் உங்களுக்கு கொண்டாட்டத்துக்கு குறைவு இருக்காது.

மேலும் படிக்க | Snake Video: கடலில் கலர்ஃபுல்லாக நீந்தி விளையாடும் பாம்பு: இது பாம்பா இல்லை பழுதா

மன அழுத்ததைப் போக்க என்ன செய்ய வேண்டும்? என டிப்ஸ் கேட்பவர்களுக்கு நாய் ஒன்றை வளர்த்துங்கள் என்று தாராளமாக சொல்லலாம். அவை உங்களுக்கு சிறந்த கம்பெனியாக இருக்கும். சின்ன சின்ன விளையாட்டுகள், அங்கும் இங்கும் ஓடித் தாவுவது என சுறுசுறுப்பாக இருந்து கொண்டே இருக்கும். அவற்றின் சுறுசுறுப்பே உங்களை வியக்க வைத்துவிடும். நாயிடம் நேரம் செலவிட்டீர்கள் என்றால் நேரம் செல்வது கூட உங்களுக்கு தெரியாது. மகிழ்விக்க மட்டுமா செய்யும், வம்பிழுக்கவும் செய்யும். பக்கத்து வீடு, நடந்து செல்பவர்கள் என அவர்களிடம் வம்பிழுத்துவிட்டு ஒன்றும் தெரியாதது முகத்தை வைத்துக் கொண்டு உங்கள் அருகில் அமர்ந்து கொள்ளும்.

அந்த நேரத்தில் உங்களுக்கு கோபமெல்லாம் வராது. செய்யறதையும் செய்துவிட்டு ஒன்னும் தெரியாததுபோல் வந்து உட்கார்ந்து கிட்டாயா என்றுதான் கேட்பீர்கள். இங்கு வைரலாகியிருக்கும் வீடியோவிலும் நாய் சேட்டை தான் இருக்கிறது. காரில் ரவுண்டு அடிக்க கூட்டிக் கொண்டுபோன நபர், நாயை காருக்குள் வைத்து கதவை சாத்திவிட்டு எங்கோ சென்றுவிட்டார். அந்த நாய்க்குட்டி காரில் மழைக்கு துடைக்கும் பம்பர் ஆடுவதை பார்த்து அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஓடி ஓடி ஆடிக் கொண்டே இருக்கிறது. என்ன சோதிக்காதீங்கடா! என்ற மைண்ட்ஸ் வாய்ஸில் அது விளையாடுவதை பார்க்கும்போது நம்மால் உணர முடியும். 

மேலும் படிக்க | 'ஜஸ்ட் மிஸ்' பிரேக் பிடிக்காத கப்பல் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News