ராஜ நாகத்தை உயிருடன் விழுங்கிய பாம்பு: கேமராவில் கைதான திக் திக் நிமிடங்கள்

Snake Viral Video: ஒரு சாதாரண பாம்பு ராஜ நாகத்தை வேட்டையாடுவதை பார்த்துள்ளீர்களா? பாம்பின் வியக்க வைக்கும் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 18, 2022, 12:16 PM IST
  • ராஜ நாகத்தை வேட்டையாடும் பாம்பு.
  • பொந்திற்கே சென்று கவ்வி இழுத்தது.
  • வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
ராஜ நாகத்தை உயிருடன் விழுங்கிய பாம்பு: கேமராவில் கைதான திக் திக் நிமிடங்கள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

காடுகள் ஆபத்தான விலங்குகளால் நிறைந்துள்ளன. அவற்றில் சில மிகவும் ஆபத்தானவை. சில சிறிய விலங்குகள் பெரிய இரைகளையும் எளிதாக கட்டுப்படுத்தி விடும். எடையில் தன்னை விட மிக பெரியதாக இருக்கும் எருமையை கூட சிங்கம் எளிதாக வேட்டையாடி விடுவதையும்  நாம் பார்த்துள்ளோம். 

ஆனால் ஒரு சாதாரண பாம்பு ராஜ நாகத்தை வேட்டையாடுவதை பார்த்துள்ளீர்களா? இல்லையென்றால், இப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதில் ராட்சத பாம்பு ஒன்று வேட்டையாடுவதற்காக ராஜ நாகத்தின் பொந்தில் நுழைகிறது. 

மேலும் படிக்க | பசுவின் கன்றுக்கு பால் கொடுக்கும் நாய்; மனம் நெகிழ வைக்கும் வீடியோ 

ராஜ நாகத்தை பிடிக்க பொந்தில் நுழைந்த பாம்பு 

தற்போது வெளியாகியுள்ள வீடியோ-வில் ராட்சத பாம்பு ஒன்று இரை தேடி அங்கும் இங்கும் அலைவதை காணமுடிகிறது. பின்னர் அதன் கண்கள் ராஜ நாகத்தின் பொந்தில் படுகிறது. பொந்தின் உள் ராஜநாகம் இருப்பது பாம்பிற்கு தெரிந்து விடுகிறது. 

பல அடி நீளமுள்ள ராஜ நாகம் பொந்தில் நிம்மதியாக இருக்க, பாம்பு மெதுவாக அதில் நுழைகிறது. உள்ளே நுழைந்த பாம்பு, ராஜ நாகத்தை கவ்விக்கொண்டு அதை மெதுவாக பொந்தை விட்டு வெளியே இழுக்கிறது. இதன் பிறகு வீடியோவில் காணப்படும் காட்சிகள் நம்மை வியக்க வைக்கின்றன. 

ராஜ நாகத்தை பாடாய் படுத்தும் பாம்பின் வீடியொ இதோ:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SNAKE WORLD (@snake._.world)

இதில், ராட்சத பாம்பு ராஜ நாகத்தை முதலில் வாயால் அழுத்தி வெளியே இழுக்கிறது. அதன் பின்னர் அதை உயிரோடு விழுங்கிவிடுகிறது. இந்த வீடியோ snake._.world என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அவீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | கம்பீரமாக நடக்கும் யானையை வியந்து பார்க்கும் மக்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News