வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணைய உலகம் மிகப் பெரியது. இந்த உலகில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான வீடியோக்கள் காணப்படுகின்றன. விலங்குகளில் சிங்கம், புலி, பாம்பு, குரங்கு, யானை என இவற்றுக்கு மவுசு அதிகம். சமூக ஊடகங்களில் இவற்றின் அதிக வீடியோக்கள் பகிரப்படுகின்றன. 


குறிப்பாக மிக வித்தியாசமான, விசித்திரமான பல குரங்கு வீடியோக்களை நாம் இணையத்தில் தினமும் காண்கிறோம். தற்போதும் அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காணப்படும் குரங்கின் தனித்துவமான தோற்றம் நம்மை வாய் பிளந்து ஆச்சரியப்பட வைக்கிறது. 


கோட் அணிந்து பந்தா காட்டும் குரங்கு: 


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காருக்குள் இருந்து குரங்கு ஒன்று வெளியே வருவதைக் காண முடிகின்றது. இந்த வீடியோ மிக அரிதான ஒரு வீடியோவாக உள்ளது. குரங்கு இதில் மனிதர்களைப் போன்ற உடை அணிந்து காணப்படுகிறது. குரங்கு வெள்ளை கோட் அணிந்துள்ளது. 


மேலும் படிக்க | ராட்சத மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் சிறுவன்..கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ 


குரங்கு காருக்குள் இருந்து வெளியே வந்தவுடன் அனைவரும் அதைப் புகழ்ந்து பேசத் தொடங்குகிறார்கள். ‘நீங்கள் நலமா?’ என்று இளைஞர் ஒருவர் கூறுவதை வீடியோவில் கேட்க முடிகின்றது. அதற்கு பதிலளிக்கும் வகையில் குரங்கும் அந்த இளைஞனின் கையை வேகமாக அடிக்கின்றது. வீடியோவில் உள்ள குரங்கின் நடவடிக்கை மூலம், அது மிகவும் கோபமாக இருப்பது தெரிகிறது.


வைரலாகும் குரங்கின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்:



வைரலாகும் வீடியோ:


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் monkeys.ir என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


குரங்கு, தன் கைகள் அழுக்காகிவிடும் என்பதால் அந்த நபரின் கையை தட்டி விட்டதாக ஒரு நபர் கூறியுள்ளார். கோட் சூட் போட்ட குரங்குக்கு தலை கால் புரியவில்லை என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். பயனர்கள் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க | என்னதான் கணவன் மனைவியா இருந்தாலும் இப்படியா செய்யுறது: வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ