வைரல் வீடியோ: காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஏனெனில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர். வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளின் காட்சிகளை பெரும்பாலான மக்கள் பார்க்க விரும்புகிறார்கள்.
இணையத்தில் நாம் அறியாத அல்லது பார்க்காத பல விஷயங்களை பார்க்கலாம். இணைய தளத்தில் பலிரப்படும் சில வீடியோக்கள் மிக விரைவாக வைரலாவதையும் கவனிப்போம். குறிப்பாக சுவாரஸ்யமான காட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கும் விலங்குகளின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. பல வீடியோக்களில் விலங்குகள் இரையை வேட்டையாடுவதையும், அதற்காக அவை என்ன செய்கின்றன என்பதையும் பார்க்கலாம்.
விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. ராஜநாகத்திற்கும் கொமோடோ உடும்பிற்கும் இடையேயான சண்டையின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்று ராஜ நாகப்பாம்பு.
மேலும் படிக்க | Viral Video: என்ன கொடுமை சார் இது... சிங்கங்களை ஓட விரட்டிய எருமை!
வைரலாகும் விடியோவை கீழே காணலாம்:
கொமோடோ டிராகன் அல்லது கொமோடோ உடும்பு என்பது ஒரு பல்லி வகையை சேர்ந்த உயிரினம். இருப்பினும், இது அளவில் மிகப் பெரியது. கொமோடோ டிராகன்கள் அதிகபட்சமாக 10 அடி நீளத்தையும், 70 கிலோ வரை எடையும் இருக்கும்.
கொமோடோ டிராகனும் விஷத் தன்மை கொண்டது. கொமோடோ டிராகன்களும் ராஜா நாகப்பாம்பும்பரஸ்பரம் தாக்கிக் கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. @LatestSightings என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்ட வீடியோவை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான மான்... மனம் பதறவைக்கும் வீடியோ!