தம் அடிச்சு மாஸ் காட்டும் குரங்கு: வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Monkey Smoking Video: ‘அட.. இதுதான் கலிகாலமா?’ என ஒரு வீடியோ இணயவாசிகளை வியக்க வைத்துள்ளது. குரங்கு சிகரெட் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 14, 2023, 03:23 PM IST
  • விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
  • குரங்குகள் சமூக ஊடகங்களின் ஹீரோக்களாக கருதப்படுகின்றன.
தம் அடிச்சு மாஸ் காட்டும் குரங்கு: வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் சமூக ஊடகங்களில் ஹீரோக்களாக கருதப்படுகின்றன. இவற்றின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகளின் அட்டகாசமான பல வீடியோக்களை நாம் இணையத்தில் தினம் தினம் காண்கிறோம். இவற்றில் சில வீடியோக்களை பார்த்து இணையவாசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோவதும் உண்டு. 

சமீபத்தில் குரங்கின் ஒரு அட்டகாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இதில், குரங்கு ஒன்று அசால்டாக புகை பிடிப்பதை காண முடிகின்றது. இதை பார்த்த சில பயனர்கள் வியந்து நிற்கின்றனர். சிலரோ வயிறு குலுங்க சிரிக்கின்றனர். சிலருக்கோ இதை நம்புவதே கடினமாக உள்ளது. 

இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் லூப்பில் பார்த்து வருகிறார்கள். இது மிகவும் வித்தியாசமான ஒரு வீடியோவாக உள்ளது. பொதுவாகவே குரங்குகள் தங்கள் வித்தியாசமான நடவடிக்கைகளுக்காக புகழ் பெற்றவை. சில சமயம் இவை மக்களை தொந்தரவு செய்கின்றன. சில சமயம், அவர்களின் பொருட்களை பறித்துக்கொண்டு அட்டகாசம் செய்கின்றன. இந்த வைரல்  வீடியோ-வில், குரங்கின் ஒரு வித்தியாசமான பாணியைப் பார்க்க முடிகின்றது. 

மேலும் படிக்க | Viral Video: உடும்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜ நாகம்! திக் திக் நிமிடங்கள்! 

வீடியோவில் குரங்கு ஒரு மரத்தில் வசதியாக அமர்ந்திருப்பதைக் காண்கிறோம். அதன் கையில் சிகரெட் உள்ளது. முதலில் குரங்கு அங்கும் இங்கும் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் புகை பிடிக்கத் தொடங்குகிறது. குரங்கு சிகரெட் பிடிக்கும் விதத்தை பார்த்தால் தினமும் சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு அசால்டான தோரணை தெரிகிறது. 

குரங்கு கூலாக சிகரெட் பிடிக்கும் ஸ்டைலை இங்கே காணலாம்: 

குரங்கின் மாஸ் ஸ்வேக் 

குரங்கின் நடவடிக்கைகளை பார்த்தால், உங்களுக்கும் கண்டிப்பாக வியப்பாக இருக்கும். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'premimouni’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். மேலும் இந்த வேடிக்கையான வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

‘இந்த வீடியோ என்னை வெகுவாக சிரிக்க வைத்தது’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொருவர் ‘இதென்ன கொடுமை, குரங்கு கையிலும் சிகரெட்டா’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

மேலும் படிக்க | ஷ்ஷ்... ஷூல பாம்பு: ஆடிப்போன நபர், அசத்தல் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News