வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளை எடுத்துக்கொண்டால், அவற்றில் குரங்கு, நாய், புலி, சிங்கம், ஆகிய மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் வெளிவருகின்றன. இவற்றில் பல வீடியோக்கள் இணையவாசிகளை கவர்ந்து வைரல் ஆகின்றன. விலங்குகளின் வேடிக்கையான பல விஷயங்களை நாம் இதில் கான்கிறோம். அப்படி ஒரு சுட்டி குரங்கின் வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. 


யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வேடிக்கையான வீடியோவில், ஒரு குரங்கு மது பாட்டிலை பிடித்துக் கொண்டு குடிப்பதை காண முடிகின்றது. வீடியோவை பார்த்தால் இந்த குரங்கின் கையில் தவறுதலாக மது பாட்டில் வந்ததாக தெரிகிறது. பாட்டிலில் இருப்பது என்ன என்பது தெரியாமல் குரங்கு அதை குடிக்கிறது. மதுபானம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை இந்த குரங்குக்கு தெரியாது. 


மேலும் படிக்க | குரங்கை விரட்டும் முயற்சியில் பல்பு வாங்கிய நபர்: வீடியோ வைரல் 


மதுபானத்தை அருந்தியவுடன் குரங்கின் கண்கள் மயங்கத் தொடங்குவது போல் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. சரக்கு அடித்து குரங்கு மயக்கம் கொள்வதை பார்த்தால் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. மதுபோதையில் குரங்கின் நிலையை பார்த்தால், பரிதாபமாக இருக்கும் அதே நேரம் வேடிக்கையாகவும் உள்ளது.


சரக்கடித்து போதையில் மிதந்த குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். 


சிலர் இந்த வீடியோவை ஒரு வேடிக்கையான வீடியோவாக பார்த்தாலும், குரங்குகள் அருகில் மதுபானங்களை வைத்து அவற்றின் உடல்நிலைக்கு ஆபத்தை விளைவித்தவர்கள் மீது சிலர் கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ‘மிருகங்களையாவது விட்டுவிடுங்கள்’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 


மேலும் படிக்க | அச்சச்சோ.. என்னால நம்பவே முடியலயே: மேஜிக் பார்த்த குரங்கின் வேற லெவல் ரியாக்‌ஷன் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ