குரங்கை விரட்டம் முயற்சியில் பல்பு வாங்கிய நபர்: வீடியோ வைரல்

அந்த நபர் குரங்கை விரட்ட முயற்சிப்பதைக் காணலாம், ஆனால் அதற்கு பின் நடந்ததை கண்டால் உங்களால் நம்ப முடியாமல் போகலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 19, 2022, 10:29 AM IST
  • சரியான பாடம் புகட்டிய குரங்கு.
  • வைரலான வீடியோ.
  • வீட்டிற்கு வந்த குரங்கு.
குரங்கை விரட்டம் முயற்சியில் பல்பு வாங்கிய நபர்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குரங்குகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம். மனிதர்கள் செய்யும் பல வேலைகளை பார்த்து குரங்குகளும் அப்படியே காப்பி அடிக்கின்றன. 

குரங்குகள் மிகவும் லூட்டி அடிக்கும் வேடிக்கையான உயிரினங்கள். மிருகக்காட்சிசாலைகளிலோ அல்லது வேறு இடங்களிலோ இவற்றின் செயல்களைப் பார்க்கும்போது, ​​நாம் அடிக்கடி வயிறு குலுங்க சிரிப்பதுண்டு. ஆனல், சில சமயம் இவற்றை பார்த்து நாம் திகைத்துப்போவதும் உண்டு. தற்போது இணையத்தில் குரங்குகளில் குறும்புத்தனம் பற்றிய ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ குரங்குக்கும் மனிதனுக்கும் தொடர்புடையது. இதில், அந்த நபர் குரங்கை பயமுறுத்த முயற்சிக்கிறார், ஆனால் அந்த நபர் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் அப்போது நடந்தது. இந்த வீடியோ மிகவும் வேடிக்கையானது, மேலும் இந்த வீடியோ குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | அழகாய் கொஞ்சி ஆசையாய் கிஸ் செய்த லங்கூர் குரங்கு: ஷாக் ஆன பெண், வைரல் வீடியோ 

இந்த வீடியோவை பார்க்கும் போதும், ஒரு நபரின் வீட்டிற்குள் குரங்குகள் நுழைய முற்படுவதை காணலாம். பின்னர் அந்த குரங்கை விரட்ட அந்த நபர் வீட்டை விட்டு வெளியே ஓடுகிறான்.  தப்பிக்க குரங்கும் அங்கும் இங்கும் ஓடுகிறது. பின்னர் அந்த குரங்கு அந்த நபரை அலேகா தூக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. உண்மையில் குரங்கு அந்த நபரின் மீது நேராக பாய்ந்து WWE மல்யுத்த வீரரைப் போல இருந்தது. இந்தக் வீடியோவை நீங்கள் கண்டால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.

குரங்கு வீடியோவை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meemlogy (@meemlogy)

இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். ’இந்த சம்பவம் வேடிக்கையாக இருப்பதோடு, திகிலூட்டும் வகையிலும் உள்ளது’ என ஒருவர் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இந்த வீடியோ @meemlogyandghantaa என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News