பார்த்தா அழாம இருக்க முடியாது: மனதை உருக்கும் அப்பா மகன் வீடியோ வைரல்

Emotional Viral Video: தந்தை மகன் இடையிலான மிக உணர்ச்சிகரமான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்தால் அழாமல் இருக்க முடியாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 18, 2022, 04:25 PM IST
  • தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உணர்ச்சிகரமான தருணத்தின் வீடியோ.
  • இதில் காணப்படும் உணர்ச்சிப்பெருக்கை வார்த்தைகளில் விவரிப்பது மிகவும் கடினம்.
  • வீடியோவைப் பார்த்த பயனர்களின் இதயங்கள் உருகிவிட்டன.
பார்த்தா அழாம இருக்க முடியாது: மனதை உருக்கும் அப்பா மகன் வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல வீடியோக்கள் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. பல வீடியோக்களில் மனித உறவுகளின் மகத்துவத்தை நாம் புரிந்துகொள்கிறோம். பல வீடியோக்களில் இதயங்களை இணைக்கும் பாலமாகவும் இவை அமைகின்றன. அப்படி ஒரு உணர்ச்சிகரமான வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. 

தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உணர்ச்சிகரமான தருணத்தின் வீடியோ ஒன்று தற்போது பகிரப்பட்டுள்ளது. இதில் காணப்படும் உணர்ச்சிப்பெருக்கை வார்த்தைகளில் விவரிப்பது மிகவும் கடினம். வீடியோவைப் பார்த்த பயனர்களின் இதயங்கள் உருகிவிட்டன. இணையவாசிகள் இந்த வீடியோ பற்றி தங்கள் உணர்ச்சிகரமான கமெண்டுகளை அளித்து வருகின்றனர். வீடியோவில், ஒரு தந்தை தனது மகனை பள்ளி விடுதியில் விட்டுச் செல்லும் போது, அவர் படும் வேதனையையும், அவர் மகனுக்கு அளிக்கும் ஆறுதலையும் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | ஏம்மா.. பிட் வைக்க இந்த இடம்தானா கிடைச்சுது: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 

தந்தை மகன் இடையிலான உணர்ச்சிகரமான தருணத்தின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Talib Khan (@talib7915khan)

பொதுவாக சமூக வலைதளங்களில் காணும் காணொளிகளில் தாயின் அன்பை விவரிக்கும் பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். தற்போது தந்தையின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு தந்தை தனது மகனை ஹாஸ்டல் வாசலில் விடுவதற்கு முன்பு நடக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளை காண முடிகின்றது.  

இந்த வீடியோவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள அபரிமிதமான அன்பை பார்த்து இணையவாசிகளின் உள்ளம் உருகியுள்ளது. அதே சமயம் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகளை இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | ‘ஷ்ஷ்... பாம்பு படி ஏறுது’: மலைப்பாம்பு படியேறும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News