வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் பலவிதமான குறும்பு செய்வதை நாம் பார்த்துள்ளோம். சமூக ஊடகங்களில் இதைப் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகள் குறும்புக்கார விலங்குகள் என்றால், சிறுத்தை, புலி, சிங்கம் போன்றவை வேட்டைக்கார விலங்குகள். அந்தவகையில் இந்த முறை மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சிங்கம் மற்றும் குரங்கு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதில் குரங்கு சிங்கத்தை வாகனமாக்கியதை காணலாம். கற்பனை கூட செய்ய முடியாத ஒரு காட்சி காட்டில் காணப்பட்டது.


மேலும் படிக்க | பாம்பை பதம் பார்த்த நாய்: வயலில் வேற லெவல் சண்டை, பகீர் வைரல் வீடியோ 


சிங்கத்தின் மீது சவாரி செய்யும் குரங்கு
இந்த வைரலான வீடியோவில், இரண்டு சிங்கங்கள் காட்டுப் பாதையில் நடந்து செல்வதைக் காணலாம். அப்போது ஒரு குரங்கு அங்கு குதித்து அதிலிருக்கும் ஒரு சிங்கத்தின் முதுகில் சவாரி செய்வதை நாம் காணலாம். சிங்கமும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக முன்னேறிச் சென்றது. இதில் குரங்கு அரசனாகவும், சிங்கம் அவனுடைய செல்லப் பிராணியாகவும் இருந்ததைப் போல காட்சியில் தோன்றியது.


வீடியோவை இங்கே பாருங்கள்



சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை @DrVivekBindra தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.  இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | காட்டு எருமைகளின் பிடியில் சிக்கிய சிங்கம்: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ