வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 சமூக ஊடகங்களில் வைரலாகும் சில வீடியோக்கள் நம் மனதை நெகிழ வைக்கும் வகையில் இருப்பதுண்டு. இவற்றில் சில வீடியோக்கள் நம் கண்களில் கண்ணீரை கூட வரவழைக்கும். அப்படிப்பட்ட வீடியோக்களை நாம் மீண்டும் மீண்டும் லூப்பில் காண்கிறோம்.


தற்போதும் அப்படி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அதில் ஒரு குரங்கு சில மான்களுக்கு உதவுவதைக் காண முடிகின்றது. பொதுவாக மனிதர்கள் விலங்குகளுக்கு அல்லது பிற மனிதர்களுக்கு உதவுவதை நாம் பார்க்கிறோம். ஆனால், விலங்குகளுக்கு பேசும், புரிந்துகொள்ளும் திறன் இல்லை.  ஆகையால் மற்ற உயிரினங்களின் தேவையை அவற்றால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், இப்படிப்பட்ட நிலையிலும், சில சந்தர்ப்பங்களில் சில விலங்குகள் மற்ற விலங்குகளுக்கு பிரச்சனையில் உதவுவதைக் காண முடிகின்றது. இது போன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


குரங்கு மானுக்கு உதவியது


இந்த வீடியோ பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. @Chopsyturvey என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து இது வெளியிடப்பட்டது. இந்த காணொளியில் சில மான்கள் பூங்காவிற்குள் மர இலைகளை சாப்பிட முயற்சிப்பதை காண முடிகின்றது. ஆனால், இலைகள் தங்களுக்கு எட்டாததால் சாப்பிட முடியாமல் தவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு குரங்கு மானுக்கு உதவ முன் வந்து மரக்கிளையில் ஏறி தன் எடையால் கிளையை கீழே தள்ளுகிறது. 


மேலும் படிக்க | கண்டிப்பா திரும்ப திரும்ப பார்ப்பீங்க: கியூட் குழந்தைகளின் வைரல் வீடியோ


குரங்கின் மாஸான வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ இதயங்களை வென்றது


குரங்கு செய்த இந்த உன்னத செயல் கோடிக்கணக்கான பயனர்களின் இதயங்களை வென்றுள்ளது. செய்தி எழுதும் வரை இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 4 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'மற்றவர்களுக்கு உதவுவது மிகப்பெரிய தர்மம்' என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘மிருகங்களை பார்த்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | ஆடி கடுப்பேத்திய பெண்: கோவத்தில் நாய் செய்த வேலை: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ