ஆடி கடுப்பேத்திய பெண்: கோவத்தில் நாய் செய்த வேலை: வைரல் வீடியோ

Dog Viral Video: ஆசையாக சாலையில் நடனமாடிய பெண்ணை திடீரென நாய் கடிப்பதை பார்த்த இணையவாசிகளுக்கு சிரிப்பதா பரிதாபப்படுவதா என்பது புரியவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 26, 2023, 11:39 AM IST
  • பெண் நடனமாடும் போது தெருநாய் ஒன்று பெண்ணின் அருகில் வந்து திடீரென அவரை கடிக்கிறது.
  • இதனால் அதிர்ச்சியடைந்து அந்த பெண் பதற்றத்துடன் அங்கிருந்து ஓடினார்.
  • இந்த வீடியோ நீண்ட நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் வைரலாகி வருகிறது.
ஆடி கடுப்பேத்திய பெண்: கோவத்தில் நாய் செய்த வேலை: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

சமூக ஊடகங்களில் அவ்வப்போது பல வித வினோதமான வீடியோக்கள் பகிரப்படுவதுண்டு. இவற்றை பார்த்தால் நம்மால் நம் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாது. அப்படி ஒரு வீடியோ தற்போதும் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதை பார்க்கும் பயனர்களுக்கும் சிரிப்பதா அல்லது பரிதாபப்படுவதா என்ற குழப்பமே ஏற்பட்டு விடுகின்றது.

பிரபல பாலிவுட் கிளாசிக் ஹிந்தி படமான ஷோலேவில், 'பசந்தி இன் குத்தோங் கே சாம்னே மத் நாச்னா’ என ஒரு வசனம் இருக்கும். ‘பசந்தி.. இந்த நாய்களுக்கு முன்னால் ஆடாதே’ என்பது அதன் பொருள். இது மிகவும் பிரபலமான வசனமாகும். இப்போது ஏன் நாய்களுக்கு முன்னால் ஆடக்கூடாது என்பதை விளக்கும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இது இணையவாசிகளை இந்த வசனத்தை மீண்டும் நினைவுகொள்ள வைத்துள்ளது. 

மேலும் படிக்க | பூனையை விழுங்க முடியாமல் அவதிபட்ட மலைப்பாம்பு: வைரல் வீடியோ

நடனமாடிய பெண்ணை கடித்த நாய்

'ரீல்ஸ் மேனியா' இளைஞர்களை பைத்தியமாக்கி வருகிறது. பிரபலமான பாடல்கள்அல்லது உரையாடல்களில் நடனமாடுவது அல்லது நடிப்பது, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வது இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாகி விட்டது. தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், ஒரு பெண் நாய்களுக்கு முன்னால் நடனமாடுவது போல் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதன் விளைவை நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாது. 

கத்ரீனா கைஃப் மற்றும் சைஃப் அலி கான் நடித்த பாலிவுட் படமான 'ரேஸ்' படத்தின் 'ஜாரா ஜரா டச் மீ டச் மீ டச் மீ...' பாடலுக்கு அப்பெண் நடனமாடுகிறார். சாலை ஓரமாக அப்பெண் நடனமாடும்போது அவர் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்கின்றது. 

வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

(@dj_ayaan_official_52)

பெண் நடனமாடும் போது தெருநாய் ஒன்று பெண்ணின் அருகில் வந்து திடீரென அவரை கடிக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்து அந்த பெண் பதற்றத்துடன் அங்கிருந்து ஓடினார். இந்த வீடியோ நீண்ட நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், வீடியோவைப் பார்த்து, மக்கள் அதிர்ச்சியடைந்தனர், கூடவே அவர்களால் சிரிப்பையும் அடக்க முடியவில்லை. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன. வீடியோவைப் பார்த்து பலரும் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | ஒரே இடி.. சிதறிய செங்கல் சுவர்... பெண் ஓட்டுனர் எஸ்கேப்.. பதற வைக்கும் விபத்து: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News