மணமகன் சொன்னதை கேட்டு மேடையிலேயே முத்தமிட்ட மணமகள்: வைரல் வீடியோ

Funny Marriage Video: நீங்கள் பல வித திருமண வீடியோக்களை பார்த்திருக்கலாம். ஆனால், இப்படி ஒரு வீடியோவை கண்டிப்பாக பார்த்திருக்க முடியாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 25, 2023, 05:37 PM IST
  • திருமணம் தொடர்பான நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • ஆனால் அவற்றில் சில மட்டுமே இதயத்தைத் திருடும் வகையில் அமைகின்றன.
  • சிலவற்றில் மணமக்களின் வித்தியாசமான பாணி நம்மை வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது.
மணமகன் சொன்னதை கேட்டு மேடையிலேயே முத்தமிட்ட மணமகள்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

திருமணம் தொடர்பான நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. ஆனால் அவற்றில் சில மட்டுமே இதயத்தைத் திருடும் வகையில் அமைகின்றன. சிலவற்றில் மணமக்களின் வித்தியாசமான பாணி நம்மை வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது. தற்போதும் அப்படி ஒரு வித்தியாசமான வீடியோ வெளியாகியுள்ளது. 

மணமக்களின் மாலை மாற்றும் சடங்கின் வீடியோ இது. இதில் மாலை அணிவிக்கும் முன்னர், மணப்பெண் தனது வருங்கால கணவனுக்கு சில நிபந்தனைகளை போடுகிறார். மணமகன் அவருடைய அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டவுடன்தான் மணமகள் தன் அன்பைப் பொழியத் தொடங்குகிறார். இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | படிக்கட்டுகளில் விழப்போன குழந்தையை காப்பாற்றிய பூனை: பதறவைக்கும் வைரல் வீடியோ

மணமகள் மணமகனை முத்தமிட்டாள்

வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமக்கள் மாலை மாற்றும் சடங்குக்காக மணமேடையில் நின்றிருப்பதை காண முடிகின்றது. இருவரும் மாலையை கையில் பிடித்துள்ளனர். முதலில் மணமகளின் முறை வருகிறது. ஆனால் மாலையை மணமகன் கழுத்தில் போடும் முன் அவர் சில நிபந்தனைகளை மாப்பிள்ளை முன் வைக்கிறார். அதை மாப்பிள்ளை உடனே ஏற்றுக் கொள்கிறார். இதற்குப் பிறகு மணமகள் அவருக்கு மாலை அணிவிப்பது மட்டுமல்லாமல் முத்தமும் கொடுக்கிறார். மணமகள் இப்படி மணமகன் மீது அன்பைப் பொழிவது உண்மையிலேயே அற்புதமாக உள்ளது. அதே சமயம் தனக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவுபடுத்த விரும்பும் அவரது துணிச்சலும் பாராட்டத்தக்கது.

வித்தியாசமான இந்த திருமண வீடியோவை இங்கே காணலாம்:

மணமக்கள் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்களை நீங்கள் இது வரை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த வீடியோவில் வரும் காட்சிகள் போல பொதுவாக எங்கும் காணப்படுவதில்லை. இந்த வீடியோ @witty_wedding என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வேடிக்கையான இந்த வீடியோவுக்கு பல லட்சக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | கன்றுக்குட்டியை வேட்டையாட துடித்த புலியை ஓடவிட்ட பசு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News