கண்டிப்பா திரும்ப திரும்ப பார்ப்பீங்க: கியூட் குழந்தைகளின் வைரல் வீடியோ

Funny Viral Video: குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் கியூட்டான சண்டையும் அதில் மிளிரும் தாயின் புத்திசாலித்தனமும் இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 26, 2023, 01:16 PM IST
  • பொதுவாக அனைவரும் சிறு குழந்தைகளை மடியில் வைத்து கொஞ்சி விளையாட ஆசைப்படுகிறார்கள்.
  • ஆனால், அவை அழத் தொடங்கினாலோ, அல்லது விஷமம் செய்தாலோ, தாயிடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.
  • ஒரு தாயால் மட்டுமே தன் அன்பினாலும், அரவணைப்பினாலும் அவர்களை அமைதிப்படுத்த முடியும்.
கண்டிப்பா திரும்ப திரும்ப பார்ப்பீங்க: கியூட் குழந்தைகளின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

குழந்தைகளை வளர்ப்பது சாதாரண விஷயமல்ல. அதுவும், ஒருவரின் வீட்டில் இரட்டைக் குழந்தைகள் இருந்தால், இருவரையும் சேர்த்து வளர்ப்பது என்பது மிகவும் கடினமான காரியம். பொதுவாக அனைவரும் சிறு குழந்தைகளை மடியில் வைத்து கொஞ்சி விளையாட ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவை அழத் தொடங்கினாலோ, அல்லது விஷமம் செய்தாலோ, தாயிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். ஒரு தாயால் மட்டுமே தன் அன்பினாலும், அரவணைப்பினாலும் அவர்களை அமைதிப்படுத்த முடியும் என்பது உண்மைதான். குழந்தைகளின் குறும்புத்தனத்தின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

குழந்தைகள் வீட்டில் விளையாடும் போது பெரியவர்களின் வேலை அதிகமாகி விடுவது நிதர்சமனான உண்மை. குழந்தைகள் அங்கும் இங்கும் பொருட்களை வீசுகிறார்கள், சில நேரங்களில் அவர்கள் வீடுகளின் சுவர்களுக்கு வெவ்வேறு வண்ணங்களில் வண்ணம் தீட்டுகிறார்கள். தங்களுக்குள் முடியை பிடித்துக்கொண்டு சண்டையிடும் இரட்டை குழந்தைகளின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இரு குழந்தைகளும் தங்களுக்கு கோவம் வரும் போதெல்லாம் மற்றவரது தலைமுடியை பிடித்து இழுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க | ஆடி கடுப்பேத்திய பெண்: கோவத்தில் நாய் செய்த வேலை: வைரல் வீடியோ

இந்த பிரச்சனையை சரி செய்ய, இந்த இரட்டை குழந்தைகளின் தாய் ஒரு அருமையான வழியை தேர்ந்தெடுக்கிறார். அதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

முடியை பிடித்து சண்டையிடும் இரட்டை சகோதரிகள்

குழந்தைகள் விளையாடும் போது ஒருவருக்கொருவர் பொம்மைகளை பிடுங்குவதையும் சண்டையிடுவதையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், இரட்டை சகோதரிகள் விளையாடி, பின்னர் சண்டையிட்டுக் கொண்டே ஒருவரது பொம்மைகளை ஒருவர் பறித்துக்கொள்வதை நாம் பார்க்கிறோம். சண்டையிடும் போது, ​​இரட்டை சகோதரிகள் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்து இழுப்பதையும் அடிக்கடி காண முடிகின்றது. அதை சமாளிக்க அவர்களுடைய தாயார் என்ன செய்கிறார் தெரியுமா? வேறு என்ன செய்வார்? குழந்தைகள் முடியை பிடித்து இழுத்து அதிகம் காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்க, இருவரின் தலைமுடியையும் வெட்டி விடுகிறார். 

அதன் பின் சண்டை போடும் போது, இரு குழந்தைகளும் முடியை இழுக்க, மற்றவரது தலையை தடவிப் பார்த்து ஏமாற்றம் அடைவதையும் வீடியோவில் காண முடிகின்றது. இது பார்ப்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளது.

கியூட்டான குழந்தைகள் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ட்விட்டரில் இது @TheFigen_ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | பூனையை விழுங்க முடியாமல் அவதிபட்ட மலைப்பாம்பு: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News