வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் நடப்பதை அதிக வீடியோக்களில் பார்த்திருக்கிறோம். சமீப காலங்களில் விலங்குகளுக்கு இடையிலான நட்பின் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் அதிகம் காண முடிகின்றது. குரங்குக்கும் பூனைக்கும் இடையே இருக்கும் நட்பை நீங்கள் பார்த்ததுண்டா? இல்லையென்றால் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும். பூனைக்கும் குரங்குக்கும் இடையிலான அழகான நட்பை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 


குரங்கு மற்றும் பூனையின் சிறு காட்சி ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. குரங்கு மற்றும் பூனையின் இந்த வைரல் வீடியோ ஆன்லைனில் அனைவரது மனதையும் வென்று வருகிறது. அந்த வீடியோவில், குரங்கு ஒன்று பூனையின் அருகில் சென்று அதை பாசத்துடன் கட்டிப்பிடிப்பதை காண முடிகின்றது. குரங்கு பூனையின் அருகில் அமர்ந்து, தனது கைகளால் அதன் கழுத்தை அணைத்துக் கொண்டிருக்கும் விதம் மிகவும் அற்புதமாக உள்ளது. 


மேலும் படிக்க | ரெக்க கட்டி பறக்குதடி தாத்தாவோட சைக்கிள்: கூல் தாத்தாவின் தூள் வைரல் வீடியோ 


குழந்தை மற்றும் குரங்கின் வியக்க வைக்கும் நட்பின் வீடியோவை இங்கே காணலாம்: 


 



பூனை குரங்கு நட்பு வைரலானது


வீடியோவின் ஆரம்பத்தில், பூனை வாலை ஆட்டி, குரங்கு தனது அருகில் வருவது தனக்கு பிடிக்கவில்லை என காட்டுவதாக பலருக்குத் தோன்றுகிறது. ஆனால், குரங்கு வருவதை பூனை பொருட்படுத்தவில்லை என்பது பிறகுதான் புரிகிறது. குரங்கு மற்றும் பூனையின் அழகான நட்பைப் பார்த்து பயனர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஒன்றை ஒன்று பார்த்தபடி அவை பகிர்ந்துகொள்ளும் அன்பு பயனர்களின் இதயங்களை உருக்குகிறது.


பூனை மற்றும் குரங்கின் இனிய நட்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் "buitengebieden" என பெயரிடப்பட்ட ஐடியுடன் பகிரப்பட்டது. இந்த கணக்கு 1.8 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | Elephant Fight Video: தனி ஒருவனாய் சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை -மாஸ் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ