10 அடி நீள பாம்பை கூலாக குளிப்பாட்டி விடும் நபர்: வீடியோவை பாருங்கள்

வீடியோவில், ஒரு நபர், 6 அடிக்கு மேல் நீளமுள்ள பாம்புக்கு அசால்டாக தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 1, 2022, 02:25 PM IST
  • பாம்பை குளிப்பாட்டி விடும் நபர்.
  • கிரங்கடிக்கும் வைரல் வீடியோ.
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
10 அடி நீள பாம்பை கூலாக குளிப்பாட்டி விடும் நபர்: வீடியோவை பாருங்கள் title=

பாம்பைக் கண்டால் என்ன, பாம்பைப் பற்றி நினைத்தாலே நம்மில் பலருக்கு கதிகலங்கும். ஆனால், ஒரு நபர் பாம்பிற்கு, அதுவும் மலைப்பாம்பிடம் சர்வ சாதாரணமாக பழகுகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் மிக கேஷ்வலாக பல அடி நீளமுள்ள மலைப்பாம்பை, வாலியிலிருந்து நீர் ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார். சுமார் 51 நொடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பொதுவாக சமூக ஊடக உலகம் ஒரு ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை காண்கிறோம். அதன்படி சுவாரஸ்யமான இணைய உலகமான சமூக ஊடகங்களில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோக்கள் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. 

மேலும் படிக்க | துரத்திய காளைகள், நம்ப முடியாத வகையில் தப்பித்த நபர்: வியக்க வைக்கும் வைரல் வீடியோ 

இங்கு வைரலாகும் வீடியோவில், ஒரு நபர், 10 அடிக்கு மேல் நீளமுள்ள நாகத்தின் மீது தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார். அந்த பாம்பும் எந்தவித சீற்றத்தையும் வெளிக்காட்டாமல் அப்படியே நிற்கிறது. பின்னர், பக்கெட்டை கீழே வைத்துவிட்டுப் பாம்பைக் கொஞ்சுகிறார் அந்த நபர். இந்த மொத்த சம்பவத்தின்போதும் ஒரு பசுவைப் போல அமைதியாக இருக்கிறது அந்த நாகம். 

வீடியோவை இங்கே பார்க்கவும்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

பகிரப்பட்ட சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது இந்த வீடியோ. பலரும் ஆச்சரியத்தில் கருத்திட்டு வருகின்றனர். மேலும் சிலர், வீடியோவில் வரும் நபர், காட்டுயிர் பாதுகாவலராக இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த வீடியோ sakhtlogg என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | நாங்களும் வாசிப்போம்ல, டிரம்ஸ் வாசிக்கும் யானை: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News